சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று (பிப்ரவரி 22) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
எண்ணிக்கையின் முடிவில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றதையொட்டி அமைச்சர் துரைமுருகன், மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், ஆ. ராசா, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெல்லையில் அதிமுக வேட்பாளர் வெற்றிக் கொண்டாட்டம்!