ETV Bharat / state

'கொடுங்கையூர் குப்பை பிரச்னையை தீர்ப்பேன்' - வடசென்னை திமுக வேட்பாளர் உறுதி - North chennai

சென்னை: சென்னையில் சேகரிக்கப்படும் 70 சதவீதம் குப்பைகள் கொடுங்கையூர் பகுதியில் கொட்டப்படுவதால் வடசென்னையில் ஏற்படும் மாசினை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என திமுக வேட்பாளர் கலாநிதி உறுதியளித்துள்ளார்.

திமுக வேட்பாளர் கலாநிதி
author img

By

Published : Mar 27, 2019, 3:15 PM IST

வடசென்னை நாடாளுமன்ற தொகுதியின்திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கலாநிதி, சென்னை தங்கசாலை அருகே உள்ள மண்டலம் ஐந்து அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி திவ்யதர்ஷினியிடம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி ஜெயந்தி கலாநிதி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

வடசென்னை தொகுதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி திவ்யதர்ஷினி மேற்கொண்டார். அப்போது திமுக வேட்பாளர் கலாநிதியின் வேட்புமனு பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்டது.

திமுக வேட்பாளர் கலாநிதி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலாநிதி,

வடசென்னை நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் ஆசியுடன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தேன். அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மீண்டும் 29ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேர்தலுக்குரிய சின்னம் ஒதுக்குவதற்காக வரவேண்டும். பொதுமக்களிடம் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

பரப்புரையை எப்போது தொடங்குவது என்பது குறித்து திமுக தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.தண்ணீர் பிரச்னை தமிழகம் முழுவதும் இருக்கிறது. மாசுவை கட்டுப்படுத்துவதற்கு திமுக தலைவர் ஏற்கனவே பல்வேறு திட்டங்களைக் கூறியுள்ளார். இவற்றில் முக்கியமாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ஏற்படும் மாசுதான்.

சென்னையில் சேகரிக்கப்படும் 70 சதவீதம் குப்பைகள் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் வடசென்னையில் மாசு ஏற்படுகிறது.இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் குடிநீர் பிரச்னை, குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னையும் உள்ளன. அதனை தீர்ப்பதற்கு புதிய குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்,என்றார்.

Intro:கொடுங்கையூர் குப்பை கொட்டுவதால்
வடசென்னையில் மாசு ஏற்படுகிறது
வடசென்னை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கலாநிதி பேட்டி

Body:சென்னை, வடசென்னை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கலாநிதி சென்னை தங்கசாலை அருகே உள்ள மண்டலம் ஐந்து அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி திவ்யதர்ஷினியிடம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி ஜெயந்தி கலாநிதி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
வடசென்னை தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி திவ்யதர்ஷினி மேற்கொண்டார்.
அப்போது திமுக வேட்பாளர் கலாநிதியின் வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கலாநிதி, வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் ஆசியுடன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தேன். அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மீண்டும் 29 ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேர்தலுக்குரிய சின்னம் ஒதுக்குவதற்காக வரவேண்டும் என கூறியுள்ளனர். பொதுமக்களிடம் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பிரச்சாரத்தை என்று துவக்குவது என்பது குறித்து திமுக தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தண்ணீர் பிரச்சினை தமிழகம் முழுவதும் இருக்கிறது. தண்ணீரை ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்துவதற்கு திமுக தலைவர் ஏற்கனவே பல்வேறு திட்டங்களை கூறியுள்ளார். இவற்றில் முக்கியமாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ஏற்படும் மாசு தான் ஆகும். சென்னையில் சேகரிக்கப்படும் 70 சதவீதம் குப்பைகள் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன இதனால் மாசு ஏற்படுகிறது. இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் குடிநீர் பிரச்சினை குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினையும் இருக்கிறது. அதனை தீர்ப்பதற்கு புதிய குழாய் அமைக்கும் திட்டம் போன்றவற்றை செயல்படுத்த உள்ளோம் என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.