ETV Bharat / state

மீண்டும் திமுகவை சீண்டும் ஆளுநர்.. டிகேஎஸ் இளங்கோவன் ஆவேசம்! - தலித் சமூக வளர்ச்சி

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சமூக நீதி பற்றி என்ன தெரியும் என திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Feb 14, 2023, 7:30 AM IST

Updated : Feb 14, 2023, 7:48 AM IST

சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 'மோடி@20 நனவாகும் கனவுகள்' (Modi@20 Dreams Come True) என்ற புத்தகத்தையும், அம்பேத்கர் & மோடி (Ambedkar & Modi) ஆகிய புத்தகங்களின் தமிழ் பதிப்பை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று(பிப்.12) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழகத்தில் சமூக நீதி குறித்து அதிகமாக பேசி வருகிறோம். மறுபுறம் பட்டியலின மக்களுக்கான எதிரான குற்றங்களும் தொடர்கின்றனர்.

குடிநீரில் மலத்தை கலப்பது, பட்டியலின மக்களை அவமானப்படுத்துவது, அவர்களை கோயிலுக்குள் விட மறுப்பது, அங்கன்வாடி பள்ளிகளில் பிரித்து உணவு வழங்குவது போன்றவைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பட்டியலின பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் 100 குற்றவாளிகளில் 93 பேர் விடுதலை ஆகிறார்கள். 7 சதவீதம் பேருக்கு தான் தண்டனை கிடைக்கிறது. ஆனால் நாம் சமூக நீதி குறித்தும், அம்பேத்கர் குறித்தும் பேசுகிறோம்" என கூறினார். ஆளுநரின் இந்த கருத்து தமிழ்நாடு அரசியலில் விவாத பொருளாக மாறியுள்ளது.

ஏற்கனவே அம்பேத்கர் & மோடி என்ற புத்தகத்திற்கு இசை அமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த புத்தகத்தின் வெளியிட்டு விழாவிலும் ஆளுநரின் கருத்தானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து 'தமிழ்நாடு' என்பதற்கு பதிலாக தமிழகம் என்று கூறலாம், திருக்குறளை ஜி.யு.போப் திரித்து மொழிபெயர்த்து உள்ளார். ஆளுநர் உரையில் தமிழ்நாடு சார்ந்த பல வார்த்தைகளை படிக்க மறுத்தது போன்ற பல சர்ச்சைகள் எழுந்தன. அந்த வரிசையில் ஆளுநரின் சமூக நீதி குறித்தான கருத்தும் சர்ச்சையானது.

ஆளுநரின் இந்த கருத்து குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஈடிவி பாரத்திற்கு பதிலளித்துள்ளார். "மறுக்கப்பட்ட கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை பட்டியலின, ஓபிசி மக்களுக்கு பெற்று தந்தது திராவிட இயக்கம் தான். திராவிட இயக்கம் பல மக்களின் வாழ்வுக்கு அதிகாரம் அளித்தது. அரசு மக்களை சமமாக நடத்துவதற்கு பெயர் தான் சமூக நீதி. அதை பற்றி ஆளுநருக்கு என்ன தெரியும்?. ஆளுநர் ரவி இதற்கு முன்பு பாதுகாப்பு துறையில் காவல் அதிகாரியாக பணியாற்றினார். அங்கு தவறுகள் நடக்கவில்லை என்று கூற முடியுமா?. தவறுகள் அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கத் தான் செய்யும். ஆர்.எஸ்.எஸ் சொல்வதை அப்படியே ஆளுநர் ரவி பேசுகிறார்" என கூறினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், சட்டப்பேரவை வெளிநடப்புக்கு பிறகு ஒருவழியாக குடியரசுத் தின தேநீர் விருந்து மூலம் அரசுடன் சுமூக உறவை தொடரும் சூழல் உருவானதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஆளுநரின் இந்த கருத்து மீண்டும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Pazha Nedumaran: "பிரபாகரன் உயிருடன் உள்ளார்; விரைவில் காட்சி தருவார்" - பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

Last Updated : Feb 14, 2023, 7:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.