ETV Bharat / state

தொடங்கியது திமுக உயர்நிலை திட்டக்குழு ஆலோசனை கூட்டம்

சென்னை: திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உயர்நிலை திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

DMK High Level Committee Consultative Meeting started

author img

By

Published : Nov 23, 2020, 11:01 AM IST

2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை திட்டக்குழு ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்தும், அடுத்த கட்ட தேர்தல் பரப்புரை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் உதயநிதி ஸ்டாலின் கைது உள்ளிட்டவற்றை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகின்றது.

திமுக உயர்நிலை திட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் திமுக உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர்கள் 30 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், அ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், தயாநிதி மாறன், கனிமொழி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க:'அதிமுகவுக்கு ஒரு நீதி, மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா' - உதயநிதி ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.