ETV Bharat / state

விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

Vijayakanth: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி, தெலங்கனா ஆளுநர் தமிழிசை, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் மறைவு
விஜயகாந்த் மறைவு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 10:41 AM IST

Updated : Dec 28, 2023, 10:56 AM IST

சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை(டிச.28) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி: விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது நடிப்பு பல லட்சம் மக்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொதுச்சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்து இருக்கிறது, அதை நிரப்ப கடினம் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Extremely saddened by the passing away of Thiru Vijayakanth Ji. A legend of the Tamil film world, his charismatic performances captured the hearts of millions. As a political leader, he was deeply committed to public service, leaving a lasting impact on Tamil Nadu’s political… pic.twitter.com/di0ZUfUVWo

    — Narendra Modi (@narendramodi) December 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தெலங்கானா ஆளுநர் தமிழிசை: "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர், சகோதரர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். நல்ல திரைப் படக்கலைஞர். நல்ல அரசியல் தலைவர். நல்ல மனிதர், நல்ல சகோதரர், ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர்,சகோதரர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.

    நல்ல திரைப்படக்கலைஞர்....
    நல்ல அரசியல் தலைவர்....
    நல்ல மனிதர்....
    நல்ல சகோதரர்....
    ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம்… pic.twitter.com/oPVTWZ1uRD

    — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு என புகழாரம் சூட்டியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு. கேப்டன் அவர்களைப் பிறந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சி தோழர்கள், ரசிகர்கள், திரையுலகினர் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும். இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே எனும் முழக்கத்தை முன்னிறுத்தி நடிகராக, நடிகர் சங்கத்தலைவராக, அரசியல்வாதியாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனிதாபிமானம் கொண்டவராக கேப்டன் விஜயகாந்த் ஆற்றிய பணிகள் என்றென்றும் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மறைந்தார் மக்களின் நாயகன் விஜயகாந்த்.. கடந்து வந்த பாதை..!

Last Updated : Dec 28, 2023, 10:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.