ETV Bharat / state

புத்தாடைகளை வாங்க கடைவீதியில் குவிந்த மக்கள் - தீபாவளி ஷாப்பிங்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளை வாங்க மக்கள் கடைவீதியில் குவிந்துள்ளனர்.

Purchase
Purchase
author img

By

Published : Nov 13, 2020, 7:42 PM IST

இந்து மக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளிப் பண்டிகையின் கொண்டாட்டத்திற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் ஜவுளிக் கடையில் கூட்டம் அலை மோதியது.

தி நகர் போன்று வண்ணாரப்பேட்டையில் ஜவுளிக்கடைகள் நிறைந்த ஜி ஏ ரோடு பகுதியில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விலை, சில்லறை விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அனைத்து வகையான துணிகள் மொத்தமாகவும் குறைந்த விலையிலும் தரத்திற்கேற்ப உயர்ரக வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு ஆடைகள் வாங்க இன்று (நவ. 13) ஏராளமான மக்கள் கூட்டம் குவிந்து வருகின்றன.

கரோனா வைரஸ் (தீநுண்மி) நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.