ETV Bharat / state

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.

சென்னையில் பட்டாசு விற்பனைத் தொடக்கம்
author img

By

Published : Oct 17, 2019, 11:38 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் இன்று பட்டாசு விற்பனை தொடங்கியது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன், திரைப்பட நடிகர் ஆரவ் ஆகிய இருவரும் இணைந்து விற்பனையைத் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பட்டாசு விற்பனையாளர்கள், ''மழை மற்றும் ஆர்வம் குறைவு காரணமாக இந்தாண்டு பட்டாசு விற்பனை மந்த நிலையில் உள்ளது. காலை 8 மணி முதல் இரவு 11.30 மணி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். தீபாவளிக்கு முந்தைய நாளான 26ஆம் தேதி 24 மணி நேரமும் பட்டாசு விற்பனை நடைபெறும். வரும் 28ஆம் தேதி வரையிலும் பட்டாசு விற்பனை தொடர்ந்து நடைபெறும்.

சென்னையில் பட்டாசு விற்பனைத் தொடக்கம்

பசுமை பட்டாசு தொடர்பான அறிவிப்பு தாமதமாக வந்ததால் இந்தாண்டு சாதாரண பட்டாசுகளோடு பசுமை பட்டாசுகளும் சேர்த்தே விற்பனை செய்யப்படும். கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் பட்டாசுகளின் விலை ஐந்து விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. சீனப் பட்டாசுகள் விற்பனை இங்கு நடைபெறாது” எனத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து த.வெள்ளையன் பேசுகையில், "பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகை முழுமைபெறாது. விலை உயர்வைப் பற்றி மக்கள் கவலைப்படமாட்டார்கள். சீனப் பட்டாசுகள் ஊடுறுவதைத் தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகளை கவரும் ஜல்லிக்கட்டு, டிக் டாக் பட்டாசுகள்...!

Intro:சென்னை: தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு சென்னையில் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது. இருப்பினும் மழை மற்றும் ஆர்வம் குறைவு காரணமாக போதிய கடைகள் திறக்கப்படவில்லை.Body:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் இன்று பட்டாசு விற்பனை தொடங்கியது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் மற்றும் திரைப்பட நடிகர் ஆரவ் இணைந்து இதனை தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பட்டாசு விற்பனையாளர்கள், மழை மற்றும் ஆர்வம் குறைவு காரணமாக இந்த ஆண்டு பட்டாசு விற்பனை மந்த கதியில் உள்ளதாகத் தெரிவித்தனர். காலை 8 மணி முதல் பட்டாசு விற்பனை தொடங்கும் என்றும் இரவு 11:30 மணி வரையும் பட்டாசு விற்பனை நடைபெறும் என்றும் வரும் 28 ஆம் தேதி வரை விற்பனை நடைபெறும் என்றும் கூறினர். தீபாவளிக்கு முந்தைய நாளான 26 ஆம் தேதி 24 மணி நேரமும் தீபாவளி விற்பனை நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பசுமை பட்டாசு தொடர்பான அறிவிப்பு தாமதாக வந்ததால் இந்த ஆண்டு சாதாரண பட்டாசுகளும் பசுமை பட்டாசுகளும் சேர்த்தே விற்பனை செய்யப்படும் என்றும், பசுமை பட்டாசுகளில் தனி குறியீடுகள் இருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச் செல்லலாம் என்றும் கூறினர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பட்டாசுகளின் விலை ஐந்து சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது என்று பட்டாசு வியாபாரிகள் கூறினர். காவல்துறை சார்பில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சீனப் பட்டாசுகள் விற்பனை இங்கு நடைபெறாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், "பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகை முழுமை பெறாது. விலை உயர்வைப் பற்றி மக்கள் கவலைப்படமாட்டார்கள். சீனப் பட்டாசுகள் ஊடுறுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Conclusion:Visual and script attached
Also I have given P2C. kindly make use of it.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.