வேலூர் மாவட்டம், அணைகட்டு தாலுகாவில் உள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தில் குத்தகை காலம் முடிந்து கைவிடப்பட்ட குவாரி நீரில் குளிக்கச் சென்ற ஜிடோன், மோசஸ் ஆகிய இரு சிறுவர்கள், நீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.
அரசின் அஜாக்கிரதையால் தங்கள் குழந்தைகள் இறந்துவிட்டதாகக் கூறி, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சிறுவர்களின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி மகாதேவன், குவாரி குத்தகையைப் பெற்ற தனியார் நிறுவனம், வேலி அமைக்காததால், அந்நிறுவனம் செலுத்திய 25 லட்சத்து 31 ஆயிரத்து 250 ரூபாயை மாவட்ட நிர்வாகம் முடக்கி வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டி, வேலி அமைத்து விபத்துகளைத் தடுக்காமல் அஜாக்கிரதையாக இருந்ததால், பறிமுதல்செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் சேர்த்து உயிரிழந்த இரு சிறுவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக நான்கு வாரங்களில் வழங்க உத்தரவிட்டார்.
மேலும், குத்தகை காலம் முடிந்த பின் குவாரிகளை ஏலம் எடுத்த நிறுவனங்கள், அங்கு வேலி அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என தலைமைச் செயலாளருக்கும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.
கைவிடப்பட்ட குவாரிகளை வேலியிட்டு மூட வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு - Madras High court judge Mahadevan
கைவிடப்பட்ட குவாரியில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி பலியான இரு சிறுவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், குத்தகை காலம் முடிந்த குவாரிகளுக்கு வேலி அமைப்பதை உறுதி செய்யும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க, தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.