ETV Bharat / state

சிம்பு தொடர்ந்த மான நஷ்ட வழக்கு; விஷாலின் மனு தள்ளுபடி

author img

By

Published : Feb 10, 2022, 8:09 AM IST

சிம்பு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில், எதிர்மனுதாரர் பட்டியலிலிருந்து தன்னை நீக்க கோரிய விஷாலின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிம்பு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு; விஷால் மனு தள்ளுபடி

சென்னை: மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், சிம்பு நடித்து வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்த படத்தில் நடிக்க சிம்புவுக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் படம் தோல்வியடைந்ததையடுத்து, ரூ.1.51 லட்சம் மட்டுமே மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாக சிம்பு தரப்பில், தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து சிம்புவுக்கு எதிராக, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நடிகர் சங்கத்தில் புகாரளித்தார்.

இந்நிலையில் மைக்கேல் ராயப்பன் தன்னை குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக கூறி ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு, சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரையும் எதிர்மனுதாரராக அவர் சேர்த்திருந்தார்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கு தற்போது தனி அலுவலர்களை அரசு நியமித்துள்ளது. இதனால் வழக்கில் இருந்து தன்னை நீக்க கோரி விஷால் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி வேல்முருகன் முன் நேற்று (பிப்.9) விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள விஷாலை நீக்க, சிம்பு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க கோரிய விஷாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பின்னர் பிரதான வழக்கு வருகின்ற மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் ரிலீஸ் வதந்தி - படக்குழு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.