ETV Bharat / state

விஜய்க்கும் ஷோபாவுக்கும் மனக் கசப்பு இல்லை - எஸ்.ஏ. சந்திர சேகர் - விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திர சேகர்

சென்னை: விஜய்க்கும் அவரது தாய் ஷோபாவிற்கும் இடையில் எந்த மனக்கசப்பும் இல்லை என எஸ்.ஏ. சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

vijay
vijay
author img

By

Published : Sep 28, 2021, 1:38 PM IST

Updated : Sep 28, 2021, 2:27 PM IST

விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திர சேகர் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "சமீபத்தில் வார இதழ் ஒன்று என்னிடம் பேட்டி எடுத்தது. அப்போது என்னுடைய படம், மற்ற விஷயங்களைக் கேட்டனர். பின்னர் விஜய் குறித்து கேட்டனர்.

ஆனால் அதில் நானும் ஷோபாவும் விஜய் இல்லத்திற்கு வெளியில், காரில் காத்திருந்ததாகவும் ஷோபாவை மட்டும் விஜய் உள்ளே வரச் சொன்னதாகவும் இதனால் நாங்கள் இருவரும் திரும்பி வந்துவிட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

எஸ்.ஏ. சந்திர சேகர் வெளியிட்ட காணொலி

அது உண்மையில்லை என்பதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனக்கும் விஜய்க்கும் பிரச்சினை உள்ளது உண்மைதான்; நான் அதை மறுக்கவில்லை. மற்றபடி அவரும் அவரது தாயும் எப்பவும்போல பேசிக்கொண்டுதான் உள்ளனர்.

விஜய்க்கும் அவரது தாய் ஷோபாவுக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை. ஆனால் ஷோபா விஜய் வீட்டு வாசலில் காத்திருந்ததாகத் தவறான செய்தியைப் பதிவு செய்துள்ளதால், அதில் உண்மை இல்லை என்று பதிவுசெய்ய வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க: விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது - எஸ்.ஏ.சந்திரசேகர்

Last Updated : Sep 28, 2021, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.