ETV Bharat / state

"ஜெயிலருக்கு பதில் சிறைக் காவலன்.. படத்திற்கு தமிழில் தலைப்பு வையுங்கள்" - இயக்குநர் ஆர்.வி‌.உதயகுமார்! - சுப வீரபாண்டியன்

Kapil Returns movie audio launch: தமிழ் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என இயக்குநர் ஆர்.வி‌. உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

Kapil Returns movie audio launch
"படத்திற்கு தமிழில் தலைப்பு வைக்க கற்றுக் கொள்ளுங்கள்" - இயக்குநர் ஆர்.வி‌.உதயகுமார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 10:55 AM IST

சென்னை: ஸ்ரீனி சௌந்தர்ராஜன் தயாரித்து இயக்கியுள்ள 'கபில் ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சுப. வீரபாண்டியன், பேரரசு, ஆர்வி உதயகுமார், சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் பேரரசு,"சினிமாவை கார்ப்பரேட் கம்பெனிகள் தான் இயக்கி வருகிறது. நானும் அதில் பாதிக்கப்பட்டவன். கடவுளை நம்பிக்கையுள்ள நானும், கடவுள் நம்பிக்கையற்ற சுப. வீரபாண்டியனும் ஒரே மேடையில் உள்ளோம். அவர் மனதிலும் கடவுள் உள்ளார். நல்ல மனதுதான் அது. நல்ல மனது உள்ள அனைவருமே கடவுள்தான்" என்றார்.

இயக்குநர் ஆர்.வி‌.உதயகுமார் பேசுகையில், "தமிழ்நாட்டில் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்தது. விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்டார். இதை கேட்கும் போது மனம் வலிக்கிறது. அப்படி ஒரு பெரிய சம்பவம் நடக்கிறது. யூடியூப்பில் தலைப்பு ரொம்ப கொடூரமாக வைக்கிறார்கள். விஜய் ஆண்டனி கைது என்று போடுகிறார்கள். எப்படி ஒரு மோசமான செயல். ரொம்ப வலிக்கிறது.

விஜய் ஆண்டனி பாவம், அவர் ஏற்கனவே சோகத்தில் இருக்கிறார். அவரை கைது என்று போடுகிறார்கள். சினிமா ஊடகங்கள் எல்லாம் சரியா தான் இருக்கிறது. நடுவில் வந்த யூடியூப் தான் ரொம்ப மோசமாக செய்கிறார்கள். தவறான டைட்டில் வைப்பது விபசாரத்துக்கு சமம். இவர்களை நல்ல ஊடகங்கள் எதிர்க்க வேண்டும் என்றார். மேலும் நாமே நம் தமிழை கொன்று வருகிறோம்.

பேன் இந்தியா படம் என்பதற்காக தலைப்பை ஆங்கிலத்தில் வைக்கிறார்கள். அது ஜெயிலராக இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் இருக்கட்டும். ஜெயிலருக்கு பதில் சிறை காவலன் என்று வைக்கலாமே? தமிழில் வைக்க கற்றுக் கொள்ளுங்கள். நாம் தான் நம் தமிழை காப்பாற்ற வேண்டும். படத்தில் பாடல்கள் எழுதும் பொழுது ஆங்கிலத்தில் கசமுசா என்று எழுதாதீர்கள். தமிழில் நல்ல பாடல்களை எழுதுங்கள். இப்போது உள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் எது தமிழ் எது என்று தெரியவில்லை" என்று பேசினார்.

சுப.வீரபாண்டியன் பேசும் போது, "நான் சமூக வலைதளத்தில் இந்த அழைப்பை போடும்போது இரண்டு கேள்வி எழுப்பப்பட்டது. ஒன்று திரைப்பட விழாவில் நீங்கள் எப்படி? இயக்குனர் பேரரசும் நீங்களும் ஒரே மேடையில் எப்படி என்பது 2 வது கேள்வி?. வேறு வேறு கட்சிகள் என்பது மேடைக்கு அல்ல. எஜமான் படத்தையும், சின்ன கவுண்டர் படத்தையும் எங்கும் உட்கார்ந்து பார்த்தவன் நான். அந்த இயக்குனர் இருக்கும் மேடையில், நானும் அமரும் வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றார்.

தொடர்ந்து வையாபுரி பேசும் பொழுது, "நான் 30 வருடங்களாக ஒரே மாதிரி இருக்கிறேன். அப்படி என்றால் தற்போது எனக்கு வயதாகிவிட்டதோ, இனிமையான விழாக்களில் துயரமான விஷயங்களை பேசக்கூடாது என்பது தவறில்லை. விஜய் ஆண்டனி மகள் இறந்துவிட்டது. இந்த செய்தியை பற்றி பகிர்ந்து கொண்டார், அது தவறில்லை. இனிமையான விழாக்களில் பகிர்ந்து கொள்வது தப்பில்லை.

ஏனெனில் மகிழ்ச்சியாக துயரம் தான் வாழ்க்கையில் உள்ளது. திருமண விழாக்களில் பல்லாண்டு வாழ்க!.. என்பது உண்மை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனெனில் பல்லாண்டு எல்லோராலும் வாழ முடியாது. நீங்கள் திரைப்படம் எடுப்பது தொழில் தான், நல்ல கதைகளை கொண்டு திரைப்படம் எடுத்தால் அது தொண்டு. திரைப்படம் நடிக்காமல் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றி பெற்று இருக்க முடியுமா என்று தெரியவில்லை.

நாம் கலையை நேசிப்பதை விட, கலைஞர்களை சிறப்பாக நேசிக்க கற்றுக் கொண்டோம். அதனால் ஆயிரம் மேடைகளில் பேசுவதை படத்தில் அரை மணி நேரத்தில் கூறி விடுகிறார்கள். படத்தை ஒரு முறை பார்த்தால் போதும் அது மனதில் இருக்கும். அதனால் மக்களுக்கு நல்ல படைப்புகளை கொண்டு போய் சேர்க்கவும் வேண்டும். மக்களுக்கு போய் சேரும் நல்ல கதைகளை படங்களாக எடுங்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "இந்த தேகம் மறைந்தாலும்.. இசையாய் மலர்வேன்" - பாடும் நிலா எஸ்பிபி நினைவு தினம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.