கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பல்வேறு துறைகள் நஷ்டம் அடைந்துள்ளன.
கோவிட்-19 காரணமாக பலரும் வேலைக்குச் செல்லாமல், தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அவ்வாறு தவிக்கும் மக்களுக்குப் பலரும் தங்களால், முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க கட்டடத்தில் வைத்து, இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தனது 'அப்பா, அம்மா' அறக்கட்டளை சார்பாக ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1/2 கிலோ டீத்தூள், காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.