ETV Bharat / state

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் - அன்று இளையராஜா, இன்று இயக்குநர் பாக்யராஜ்... - பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இயக்குநர் பாக்யராஜ்

பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளதாக இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையகமான கமலாலயத்தில்  இயக்குநர் பாக்யராஜ்

author img

By

Published : Apr 20, 2022, 2:18 PM IST

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (ஏப்ரல்.20) நடைபெற்றது. நூலினை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிடத் திரைப்பட இயக்குநர் பாக்யராஜ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வராஜ், நடிகர் சிவாஜி கணேசன் மகன் தயாரிப்பாளர் ராம்குமார் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் பேசிய இயக்குநர் பாக்யராஜ், "நான் பெங்களூரு சென்றிருந்த போது அங்குள்ள மக்கள் என்னிடம் அண்ணாமலை ஐபிஎஸ் தொடர்பாக புகழாரம் சூட்டினார்கள். சரியான ஆளைத் தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்துள்ளதாக அவர்கள் கூறினார்கள். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், விமர்சனம் செய்பவர்களைக் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார். ஏனென்றால் அவர்கள் நல்லதையும் பேச மாட்டார்கள், பிறர் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்" என குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: "மோடியை பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார்..!"- இளையராஜா கூறிய காரணம் என்ன?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.