சுதந்திரப் போரட்ட வீரர் தீரன் சின்னமலையை ஆங்கிலேயர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரியில் தூக்கிலிட்டனர்.
அவரது நினைவை போற்றும்விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 214ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செய்தனர்.