ETV Bharat / state

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாக நேரிடும்.. டிஜிபிக்கு ஆர்எஸ்எஸ் நோட்டீஸ்..

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த அனுமதி அளிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்று தமிழ்நாடு டிஜிபிக்கு சைலேந்திர பாபுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

டிஜிபிக்கு ஆர்எஸ்எஸ் நோட்டீஸ்
டிஜிபிக்கு ஆர்எஸ்எஸ் நோட்டீஸ்
author img

By

Published : Feb 20, 2023, 5:36 PM IST

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எ.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, பிப்ரவரி 10ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பில், தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்தது உடன், மூன்று தேதிகளை தேர்வு செய்து காவல்துறையிடம் விண்ணப்பிக்க ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும், அவற்றில் ஒரு தேதியை தேர்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறைக்கும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த உத்தரவின் அடிப்படையில் பிப்ரவரி 12, 19 மற்றும் மார்ச் 5ஆம் தேதிகளை பரிந்துரை செய்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர், பிப்ரவரி 11ஆம் தேதி தமிழ்நாடு டிஜிபி மற்றும் அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். இவற்றில் முதல் இரண்டு தேதிகள் முடிந்து விட்ட நிலையில், மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி இன்று (பிப். 20) மற்றொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில், "சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அளித்த விண்ணப்பித்தை ஏற்று, மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதியளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி அளிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவான சாலைகளில் அணிவகுப்பு நடத்துவது அடிப்படை உரிமையாகும். இந்த உரிமை மீது கட்டுப்பாடுகள் விதிக்க மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. தடை செய்ய அதிகாரம் இல்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி அடிப்படை உரிமையை தடை செய்ய முடியாது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது அரசின் கடமை. ஆகவே, ஆரோக்கியமான ஜனநாயகத்தை பேண, அமைதியான முறையில் பேரணி, அணிவகுப்பு, பொதுக்கூட்டம், போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: 'முதலமைச்சர் கோப்பை' விளையாட்டில் தருமபுரி வட்டாட்சியர் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.