சென்னை சைதாபேட்டையைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் நிவேதா(17), 12ம் வகுப்பு படித்து வந்தார். நிவேதாவிற்கு மூளையில் கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. வெகு நாட்களாக வலியில் தவித்து வந்த அவர், நேற்றிரவு வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.