ETV Bharat / state

ராகுல் பதவி நீக்கம்: "காங்கிரஸ் கட்சிக்கு மோடி நல்ல வாய்ப்பை உருவாக்கியுள்ளார்" - திருமாவளவன் - Thirumavalavan speech

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து காங்கிரஸ் கட்சிக்கு மோடி நல்ல வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ராகுல் பதவி நீக்கம்
ராகுல் பதவி நீக்கம்
author img

By

Published : Mar 30, 2023, 12:38 PM IST

காங்கிரஸ் கட்சிக்கு மோடி நல்ல வாய்ப்பை உருவாக்கியுள்ளார்

சென்னை: வள்ளுவர்கோட்டத்தில் ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'ஜனநாயக பாதுகாப்பு அறப்போர்' என்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "ஏன் இந்த அறம்போராட்டம். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி ஒன்றும் பாதிக்கப்பட போவதில்லை. ராகுல் காந்தி மிக தெளிவாக இருக்கிறார். துணிவோடு இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு மோடி நல்ல வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி மற்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். குறிப்பாக ஒதுங்கி இருக்கும் கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். மம்தா பேனர்ஜி, சந்திரசேகர் ராவ், கெஜிர்வால் போன்றவர்களை இணைக்க முயற்சி எடுக்க வேண்டும். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பதை நான் சாவர்கர் இல்லை, காந்தி என்று ராகுல் காந்தி கூறினார். ராகுல் காந்தி திறமையானவர். அவர் இந்திய சமுகத்தை நன்கு படித்து வைத்திருக்கிறார்.

பாஜகவுக்கும், காங்கிரஸ்க்கும் இடையே போர் என்றோ, ராகுல் காந்தி மோடி இடையேயான போர் என்றோ பார்க்க வேண்டாம். இது கருத்தியல் போர். பாஜக முன்னெடுப்பது கருத்தியல் போர். இதனை ராகுல் காந்தி புரிந்து வைத்துள்ளார். இந்த விஷயத்தில் ராகுல் காந்தியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இறுதி வரை உங்களோடு இருப்போம். பாஜக முன்னெடுப்பது தேர்தலுக்கான போர் இல்லை, கருத்தியல் போர். அரசியல் அமைப்பு சட்டத்தை சிதைக்க பார்க்கிறார்கள். மாநில அரசு கூடாது, மாநில கட்சி கூடாது என்ற கோட்பாட்டை பாஜக கொண்டுள்ளது.

சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக ராகுல் காந்தி இருக்கிறார். ராகுல் காந்தியிடம் சமரசம் இல்லாத ஆளுமை இருக்கிறது. வாக்குகள் பற்றி அவருக்கு கவலை இல்லை. அவருக்கு பதவி மீது நாட்டம் இல்லை. பிரதமர் பதவி மீது நாட்டம் இல்லை. ஏன் என்றால் அவர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதே ராகுல் காந்தி பிரதமராக ஆகி இருக்கலாம்.

மேலும் அதானி குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுத்தினோம். அதானி 8 ஆண்டுகளில் உலக பணக்காரர்கள் வரிசையில் 3 ஆம் இடத்துக்கு எப்படி வந்தார். மோடியின் நண்பர் என்ற ஒரே தகுதியை வைத்து 8 ஆண்டுகளில் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 ஆம் இடம் வரும் அளவுக்கு வந்துள்ளார். மோடியால், அரசு நிலங்கள் அதானிக்கு வழங்கப்பட்டது. பல ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்பட்டது. பின்னர் அந்த கடன்கள் வாராக் கடனாக தள்ளுபடி செய்யப்படும். இதுபோன்று பல ஆயிரம் கோடி வங்கி கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பி சென்றவர்கள் குஜராத்தை சேர்ந்த மோடியின் நண்பர்கள்.

ராகுல் காந்தி பதவியை பறிப்பதன் மூலம் தடுமாற வைக்கலாம் என்று நினைக்கிறார்கள், அவரா தடுமாறுவார்?. ரூ.20 ஆயிரம் கோடி அதானிக்கு எப்படி வந்தது என்று கேட்டார். ராகுல் காந்தியை குறைந்து எடை போடும் அளவுக்கு ஆளுமை இல்லை. திறைமையானர். அதானியுடன் மோடியை சம்பந்தப்படுத்தியுள்ள அறிக்கை, ஹிடர்ன்பர்க் அறிக்கை. பாஜக அரசை தூக்கி எறியப்போகிற அறிக்கையாக அது அமையப்போகிறது. பாஜக அதானி அம்பானிகளின் தயவால் வளர்ந்து நிற்கும் கட்சி. சனாதனத்தை தூக்கிப் பிடிக்கும் கட்சி. முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை உருவாக்கி, அதன் மூலம் இந்துக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செயல்படும் கட்சி பாஜக. அது வெறுப்பு அரசியலை செய்து வரும் கட்சி.

பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் மத விரோதத்தை தனது வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை சிதைக்க, நீர்த்துப் போக செய்யும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. மதசார்பு இருக்கக்கூடாது என்ற கொள்கையை கொண்ட கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. இந்தியாவில் புதிதாக உருவாகும் அரசு, மத சார்பு கொண்ட அரசாக இருக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் இருக்கிறது.‌ இதனால் தான் நாம் காங்கிரஸ் உடன் நிற்கிறோம். காந்தியும் மதசார்பின்மை கொள்கையுடன் இருந்தார். அதனால் தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மதசார்பின்மை கொள்கையில் உறுதியோடு இருந்தவர் காந்தி. அதே போன்று உறுதியாக இருந்தவர் நேரு.

அவரைப் போன்று மத சார்பின்மையை அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் கொண்டு வந்தவர் இந்திரா காந்தி. இந்தியா மத சார்பின்மை நாடாக இருக்க ஒரு கொள்கை வாய்ப்பாக இருப்பவர் ராகுல் காந்தி. ஏன் மோடி பயப்படுகிறார். அதானியுடன் சேர்ந்து மோடி கூட்டு கொள்ளை அடித்திருக்கலாம். அதனால் தான் பயப்படுகிறார். ஏன் இதுவரை அதானி வீட்டில் சிபிஐ சோதனை நடத்தவில்லை. ஆதாரங்களை தேடவில்லை. ஏனென்றால் அதானி மோடியின் நண்பர். அதானி மோடியின் முகமூடியை அணிந்திருக்கிறார். அதனால் தான் அதானி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ராகுல் காந்தி பதவி பறிப்புக்காக போராடவில்லை. அதற்கு பின்னால் அரசியலுக்காக தான் போராடுகிறோம். சனாதன சக்திகளுக்கு எதிராக ஏப்ரல் 14 தேதி தமிழ்நாட்டில் மிகப்பெரும் பேரணியாக நடக்க வேண்டும். இன்று தொடங்கிய போராட்டம் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை தொடர்ந்து போராட வேண்டும். சனாதன சக்திகளை தூக்கி எறியும் வரை போராட வேண்டும். 2024 இல் ராகுல் காந்தியின் கனவே நினைவாக்கும் வகையில் ராகுல் காந்திக்கு துணை நிற்போம்" என கூறினார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் - என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.