ETV Bharat / state

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய டிசம்பர் 8ஆம் தேதி கடைசி நாள் - சென்னை

தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்யும் பணி வரும் டிசம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய டிசம்பர் 8 ஆம் தேதி கடைசி நாள்

author img

By

Published : Dec 6, 2022, 11:01 PM IST

சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கடந்த நவ. 9ஆம் தேதி தொடங்கிய இப்பணிகள் வரும் டிச.8ஆம் தேதியுடன் முடிவடைகின்றன.

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வரைவு வாக்காளா் பட்டியலின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இப்போது 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் ஆண்கள் 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேரும், பெண்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் 7 ஆயிரத்து 758 பேரும் உள்ளனா்.

வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய கடந்த மாதம் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைக்கும் இடங்களில், சிறப்பு முகாம்கள் நடந்தன. இந்த சிறப்பு முகாமில் 17,02,689 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்கு வரும் டிச.8-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இன்னும் 2 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில் தற்போது 17 வயது நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்க முடியும். 18 வயது ஆனதும், பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், வருகிற 26ஆம் தேதிக்குள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும்; விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க, வருகிற ஜனவரி 3ஆம் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படுகிறது. மேலும் வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் இணைய தளமான www.nvsp.in மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை செய்யலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கல்லூரிக்கு நேரில் சென்று படித்தவர்களே ஆசிரியர்களாக நியமனம் - மறு ஆய்வு செய்ய நீதிமன்றம் ஆணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.