ETV Bharat / state

மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம்: விரைவில் மருத்துவர்கள் கைது? - மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம்

மாணவி பிரியா உயிரிழந்த விவகாரத்தில் போலீசாரிடம் மருத்துவ அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

விரைவில் மருத்துவர்கள் கைது
விரைவில் மருத்துவர்கள் கைது
author img

By

Published : Nov 18, 2022, 6:47 AM IST

சென்னை: கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு வலது கால் மூட்டியில் பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழு நடத்திய ஆய்வில், மருத்துவர்கள் கவனக்குறைவாக செய்த அறுவை சிகிச்சையில் தான் பிரியா இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை எலும்பு முறிவு துறை மருத்துவர்கள், பால்ராம் சங்கர் மற்றும் சோமசுந்தர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.

இதற்கிடையே பெரவள்ளூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பிரியாவின் மரணம் தொடர்பாக 12 விதமான கேள்விகளை கேட்டு பெரவள்ளூர் காவல்துறையினர் மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு கடிதம் அனுப்பினர்.

இந்த நிலையில் பிரியா மரணம் நிகழ்ந்தது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் காவல்துறையிடம் அறிக்கையை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கையில் மருத்துவர்கள் பால்ராம், சோம சுந்தரம், மயக்க மருந்து செலுத்திய மருத்துவர், மருத்துவ அதிகாரி, எழும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், வார்டு பணியாளர் ஆகியோர் செய்த கவனக்குறைவு காரணமாகவே பிரியா மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனக்குறைவாக செயல்பட்டதன் விளைவாகவே மரணம் நிகழ்ந்திருப்பதாக அறிக்கையின் மூலம் உறுதி செய்யபட்டதை அடுத்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரண்டு மருத்துவர்கள் உட்பட பலர் மீது கவனக்குறைவாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.

304(a) என்ற இந்திய தண்டனை சட்டம் தவிர வேறு எந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனைக்கு அனுப்பி இருப்பதாகவும், அதன் பின்னர் நாளை முதல் தகவல் அறிக்கையில் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த சட்டப்பிரிவுகள் மாற்றப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து எழும்பூர் நீதிமன்றம் மூலமாக அனுமதி பெற்று இரண்டு மருத்துவர்களுக்கும் போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. சம்மனை பெற்றுக்கொள்ளாமல் மருத்துவர்கள் தலைமறைவாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறுநீர் கலந்த உணவு - காதலை நம்பி கொல்கத்தா சென்ற ஈரோடு பெண்ணுக்கு கொடுமை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.