ETV Bharat / state

பாஜகவின் கிளை அமைப்பு அதிமுக - கே.பாலகிருஷ்ணன் - BJP

சென்னை: பாஜகவின் கிளை அமைப்பு போல் அதிமுக உருவாகி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

பாஜகவின் கிளை அமைப்பு அதிமுக -கே.பாலகிருஷ்ணன்
author img

By

Published : Jul 26, 2019, 6:16 PM IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் குறித்து விவாதிக்க ஸ்டாலினை சந்தித்தேன். வேலூரில் நிச்சயமாக திமுக வெற்றி பெறும். அதிமுகவை பொறுத்தவரை பணம் பலம் கொண்டு எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முயற்சி செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.

பாஜகவின் கிளை அமைப்பு அதிமுக -கே.பாலகிருஷ்ணன்

மேலும் பேசிய அவர், அதிமுக உண்மையான அதிமுக போல் இல்லை. பாஜகவின் கிளை அமைப்பு போல் மாறி வருகிறது என விமர்சித்தார்.

Intro:Body:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகவும் மற்றும் வேலூர் தொகுதி தேர்தல் குறித்து பேசவும் சந்தித்து பேசினேன். நிச்சியமாக வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பல லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற எல்லாவிதமான சூழ்நிலை உள்ளது. அதிமுக பொறுத்தவரை பணம் பலம் கொண்டு மிரட்டி எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முயற்ச்சி செய்து வருகின்றனர்.

நடைபெற்றுக் கொண்டுள்ள நாடாளுமன்றத்தில் ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட சட்ட மசோதாக்காளை அவசரமாக பிஜேபி தற்போது நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக தகவல் உரிமை சட்டத்தை திருத்தி அந்த சட்டத்தை நீர்த்து போக செய்துள்ளார்கள். அதே போல் என்.ஐ.ஏ சட்டத்தை திருத்தி எல்லா மாநிலத்தில் தீவிரவாதிகளை அடக்குவது என்கிற பெயரிலே அவர்களுக்கு பிடிக்காதவர்களை தீவிரவாதி என முத்திரை குத்தி கைது செய்து வருகின்றனர்.

மேலும் முத்துலாக் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் அதை திருத்தி நிறைவேற்றி உள்ளனர். இத்தகைய பிஜேபி செயல்பாடுகள் வேலூர் தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறேன்.

அதே போல் அதிமுக அரசு சட்ட மன்ற அவசர கதியில் முடித்துள்ளனர். எதிர்கட்சிகள் எழுப்பிய எந்த பிரச்சனைகளுக்கும் ஆக்கப்பூர்வமான பதில்கள் சொல்லப்படவில்லை. ஹைடரோ கார்பன் அனுமதி வழங்க மாட்டோம் என இங்கு அமைச்சர்கள் சட்ட மன்றத்தில் அடித்து சொல்கின்றனர் ஆனால் இன்னொரு பக்கம் பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது.
எதிர்கட்சி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சட்ட மன்றத்தை எதோ நாடகம் போல் நடத்தி முடித்துள்ளனர்.

அதிமுக உண்மையான அதிமுக போல் இல்லை. பிஜேபி கிளை அமைப்பு போல் மாறி வருகிறது. தமிழகத்தில் ஜெய்ஹிந்த் சொல்லும் பழக்கம் இல்லை ஆனால் அதிமுக உறுப்பினர் அதை சொல்லி ஏற்றுக்கொண்டார்.

பத்து சதவீதம் இடஒதுக்கீடு பொறுத்தவரை இன்று மட்டும் இல்லை 1991 முதல் அதை வற்புறுத்தி வருகின்றோம். தற்போது அரசு அதை சட்ட திருத்தமாக கொண்டு வந்துள்ளதால் அதை ஆதரிக்கின்றோம்.

என்.ஐ.ஏ விவகாரத்தில் திமுக செயல்பாடு வேறு என்றால் அதற்கான விளக்கம் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

ஆந்திர போல் தமிழக அரசு துறைகளில், தமிழக நிறுவனங்களிலும், மத்திய அரசாங்கத்தின் தமிழகத்தில் செயல்படும் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு தான் 80% மேலாக முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற சட்ட திருத்தத்தை வற்புறுத்தி உள்ளோம் மீண்டும் வற்புறுத்திகின்றோம்.

சிலை கடத்தல் விவகாரத்தில் இரு
அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என காவல் துறை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் நிச்சியமாக அந்த அமைச்சர்கள் பதவி விளக வேண்டும் அவர்கள் மீது வழக்கு பதவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.