முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழா இன்று (ஜன.27) நடைபெற்றது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். அதையொட்டி இவ்விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னைக்கு படையெடுத்து வந்தனர்.அலைகடல் எனத் திரண்டு வந்த அதிமுக தொண்டர்களால் மெரினா கடற்கரை பகுதி ஸ்தம்பித்தது.
![AIADMK carders](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-coronainfection-7209106_27012021142737_2701f_1611737857_611.jpg)
இந்நிகழ்வில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்தனர். அவர்களின் மூன்றில் ஒரு பங்கினர் கூட முகக்கவசம் உள்ளிட்ட கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை. இதனால் கரோனா பரவும் அபாயம் சூழல் உருவாகியுள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். சுமாராக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள மதுபானக் கடையில் அதிமுகவினர் அதிக அளவில் மதுபானங்களை வாங்கி சென்றனர். தொண்டர்களின் வருகையால் சென்னை மெரினா கடற்கரை சாலை, சேப்பாக்கம், உள்ளிட்ட சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா - ஸ்ரீபெரும்புதூரில் வாகனங்கள் கணக்கெடுப்பு