ETV Bharat / state

கோயில்களில் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கத் தடை...! - Parking amount

சென்னை: தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கோயில்களில் நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Court orders
author img

By

Published : Jun 10, 2019, 1:43 PM IST

திருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அறங்காவலர் சேதுராமன் தொடர்ந்த வழக்கில், கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் கட்டணம் வசூலிப்பதாகவும், அதனால் எந்த அதிகாரமும் இல்லாமல் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் இன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர் கோரிக்கையின்படி கோயில்களில் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்தார்.

தமிழ்நாடு கோயில்களில் சட்டவிரோதமாக நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பி, சட்டவிரோதமாக எந்த அதிகாரமும் இல்லாமல் நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம் வசூலிப்பதை கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

மேலும், 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை அனுப்ப வேண்டும்.

  • சட்ட விரோதமாகக் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சிவில், குற்ற நடவடிக்கைகள் எடுக்க காவல் துறைக்கு உத்தரவு.
  • நடவடிக்கை எடுக்க தவறும் அலுவலர்கள் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
  • கோயில் நுழைவாயில்களில் அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.
  • இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்கள் அப்பகுதி மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.