ETV Bharat / state

‘கவுன்சிலர்களுக்கும் ஊதியம் என்ற நல்ல செய்தி விரைவில் வரும்’ - மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி‌ வார்டு 24-வது அதிமுக மாமன்ற உறுப்பினர் ஒருவர், கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் கேட்டு மாமன்றத்தில் கோரிக்கை வைத்தார். கவுன்சிலர்களுக்கும் ஊதியம் என்ற நல்ல செய்தி விரைவில் வரும் என சென்னை மேயர் பிரியா பதிலளித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 30, 2023, 10:39 PM IST

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம், ரிப்பன் மாளிகையில் மேயர் தலைமையில் இன்று (ஜன.30) நடைபெற்றது. அப்போது, மாமன்றத்தில் பேசிய சென்னை மாநகராட்சி‌ வார்டு 24வது அதிமுக மாமன்ற உறுப்பினர் சேட்டு, ’மக்களின் நேரடிக்குறைகளை சரி செய்யும் பணியில் ஈடுபடும் கவுன்சிலர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் போல ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் கூலியாக 800 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் போல் மாமன்ற உறுப்பினர்களுக்கும் மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.

கவுன்சிலர்களுக்கும் ஊதியம் என்ற நல்ல செய்தி விரைவில் வரும்

இடையில் குறுக்கிட்ட மாநகராட்சி துணை மேயர், கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய மேயர் பிரியா, ’அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் நல்ல செய்தி வரும். இறுதிப்படுத்திவிட்டு நல்ல செய்தியை அறிவிக்கலாம் என இருக்கிறோம்’ எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: பட்டியலின இளைஞரை சாதி குறித்து இழிவாகப்பேசிய ஊராட்சி மன்றத்தலைவர் - தன்னிலை விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.