சென்னையில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. அண்ணா நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப் பரவல் சற்று அதிகரித்து காணப்படுகிறது. அவற்றைக் குறைக்கும் நடவடிக்கையாக அந்தந்த மண்டலங்களில் அதிக மருத்துவ முகாம்களும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது.
இதனையடுத்து, 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென மாநகராட்சி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் இதுநாள் வரையிலும் 16,99,245 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒரு குடியிருப்பு பகுதி அல்லது நிறுவனத்தில் 45 வயதிற்கு மேல் 30 நபருக்கு மேற்பட்டோர் இருந்தால் மாநகராட்சி தரும் விண்ணப்பத்தை (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfs_HEcq85uipsA0stMdt18yeM8GWT1dDhZ5BX5BwlbdgR4yw/viewform ) நிரப்பி அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.
அதன் பிறகு மாநகராட்சி மூலம் ஒரு சிறிய முகாம் போல் அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்படும்.
இதையும் படிங்க: இஸ்ரேல்-பாலஸ்தீன் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் - ஐநா அழைப்பு