சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 619 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,646 நபர்களுக்கும், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 1,647 நபர்களுக்குக் கரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 47 லட்சத்து 788 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 26 லட்சத்து 48ஆயிரத்து 688 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 993 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் குணம் அடைந்து 1619 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 96ஆயிரத்து 316 என உயர்ந்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 16 நோயாளிகளும் என 19 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்து உள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35ஆயிரத்து 379 என உயர்ந்துள்ளது. இதனிடையே கோயம்புத்தூர், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை - 5,48,097
கோயம்புத்தூர் - 2,40,679
செங்கல்பட்டு - 1,67,747
திருவள்ளூர் - 1,17,155
ஈரோடு - 1,00,920
சேலம் - 97,443
திருப்பூர் - 92,208
திருச்சிராப்பள்ளி - 75,472
மதுரை - 74,362
காஞ்சிபுரம் - 73,607
தஞ்சாவூர் - 72,741
கடலூர் - 63,069
கன்னியாகுமரி - 61,526
தூத்துக்குடி - 55,716
திருவண்ணாமலை - 54,017
நாமக்கல் - 50,102
வேலூர் - 49,218
திருநெல்வேலி - 48,711
விருதுநகர் - 45,928
விழுப்புரம் - 45,272
தேனி - 43,349
ராணிப்பேட்டை - 42,895
கிருஷ்ணகிரி - 42,559
திருவாரூர் - 39,825
திண்டுக்கல் - 32,702
நீலகிரி - 32,425
கள்ளக்குறிச்சி - 30,754
புதுக்கோட்டை - 29,555
திருப்பத்தூர் - 28,811
தென்காசி - 27,240
தர்மபுரி - 27,340
கரூர் - 23,430
மயிலாடுதுறை - 22,576
ராமநாதபுரம் - 20,290
நாகப்பட்டினம் - 20,223
சிவகங்கை - 19,696
அரியலூர் - 16,616
பெரம்பலூர் - 11,866
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1025
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1083
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க : ரூ.1597.59 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்