ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 439 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Feb 27, 2022, 8:44 PM IST

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 439 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

covid attack  tamil nadu covid cases  corona cases in tamilnadu  corona cases  கரோனா பாதிப்புகள்  தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புகள்  கரோனா எண்ணிக்கை  தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை
கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 60 ஆயிரத்து 304 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 439 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 49ஆயிரத்து 7ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 6 ஆயிரத்து 393 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,209 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 4 ஆயிரத்து 611 என உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 3 என உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 119 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 66 நபர்களுக்கும் ,செங்கல்பட்டில் 51 நபர்களுக்கும், ஈரோட்டில் 16 நபர்களுக்கும் நீலகிரியில் 22 நபர்களுக்கும் நாமக்கல்லில் 10 நபர்களுக்கும், ராணிப்பேட்டையில் 11 நபர்களுக்கும், திருவள்ளூரில் 18 நபர்களுக்கும் திருப்பூரில் 16 நபர்களுக்கும், திருச்சியில் 11 நபர்களுக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் தேனி போன்ற மாவட்டங்களில், ஒருவருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

இதையும் படிங்க: இந்தியா கரோனா நிலவரம்- 10,273 பேர் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.