ETV Bharat / state

ஈரோடு கிழக்கு தேர்தலை நிறுத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்! - dmdk to stop Erode East by election

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதால் தேர்தலை நிறுத்த வேண்டும் என தேமுதிக வழக்கறிஞர் அணித் தலைவர் ஜனார்த்தனன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 21, 2023, 5:13 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதால் தேர்தலை நிறுத்த வேண்டும் என தேமுதிக வழக்கறிஞர் அணித் தலைவர் ஜனார்த்தனன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை தேமுதிக வழக்கறிஞர் அணியினர் நேரில் சந்தித்து புகார் அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஜனார்த்தனன், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இன்று மீண்டும் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம். தற்போது ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் எனவும், முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஈரோடு இடைத்தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடந்து வருகிறது. இடைத் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதால் தேர்தலை நிறுத்த வேண்டும். இன்று கொடுத்துள்ள மனு மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அனுகுவோம் என்றும், 500 ரூபாய் பணம், குக்கர் கொடுத்தது, எந்த சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என பூத் சிலிப் கொடுத்தது என வீடியோ ஆதாரங்களை கொடுத்துள்ளோம்" என்று கூறினார்.

நேற்றைய தினம் தான் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக புகார் அளித்தாலும், இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று எவ்வித புகாரும் தன்னிடம் வரவில்லை என்று தமிழ்நாடு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியிருந்த நிலையில், தேமுதிக சார்பில் இன்றைய தினம் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரூ.2,000 தான் மொத்த செலவு.. யூடியூப் மூலம் மட்டுமே பிரச்சாரம்.. ஈரோடு கிழக்கில் இப்படி ஒரு வேட்பாளரா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.