ETV Bharat / state

நாகர்ஜூனா படத்துக்கு இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு!

நடிகர் நாகர்ஜூனாவின் புதிய படத்துக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்துள்ளது.

நாகார்ஜுனா படத்தை தடை செய்யவேண்டும் ..!
நாகார்ஜுனா படத்தை தடை செய்யவேண்டும் ..!
author img

By

Published : Dec 4, 2021, 9:44 PM IST

சென்னை: வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ,அக்கட்சியின் மாநில தலைவர் தடா அப்துல் ரஹீம், நடிகர் நாகர்ஜுனா நடித்த ‘வைல்டு டாக்’ படத்தை தடை செய்யக்கோரி புகார் அளித்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த ஏப்ரல் மாதம் OTTஇல் வெளியான ‘வைல்டு டாக்’ திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போன்று சித்தரிக்கும் பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, பள்ளிவாசல் மதரசா போன்ற இடங்களில் தீவிரவாத கும்பலுக்கு அடைக்கலம் கொடுப்பது போன்ற காட்சிகளும், இஸ்லாமிய இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இது குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்களை களங்கப்படுத்தும் வகையில் உள்ளது. இஸ்லாமிய மக்களை களங்கப்படுத்தும் இதுபோன்ற திரைப்படங்களை உடனடியாக OTT தளத்தில் இருந்து நீக்கி தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும், “இந்தப் படத்தில் நடித்த நடிகர் நாகர்ஜுனா உள்ளிட்ட படக்குழுவினரைக் கைது செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட சென்றவர் மீது தாக்குதல் - 10 பேர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.