சென்னை: மதுரை மாவட்டம், திருமங்கலம் வேங்கடாதிரி தெரு முன்சீப் கோர்ட் சாலையில் வசித்துவருபவர் மோனேஷ்பாபு. இவர், அருகிலுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை தனது வீட்டில் வைத்து சுயநினைவை இழக்கச் செய்து திருமணம் செய்துகொண்டார்.
2020ஆம் ஆண்டு செப்.17ஆம் தேதி நடந்த இதன் திருமணத்தை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பெண்ணின் வீட்டில் தெரியவரவே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் அந்த திருமணத்தை ஏற்றுக்கொண்ட அப்பெண், மோனேஷ்பாபுவுடன் திருமங்கலத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார்.
இதன் இடையே தான் திருமணமான சில தினங்களில் மோனேஷ்பாபுவின் உண்மையான முகம் அந்தப் பெண்ணுக்கு தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தனது நகை மற்றும் வங்கிக் கணக்கை வைத்தும், கந்துவட்டி, வங்கிகளில் கடன் வாங்கியும் மோனேஷ்பாபு ஆடம்பரமாக செலவு செய்து வாழ்ந்து வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டுகின்றார்.
இவ்விவகாரம் குறித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பெண், தன்னிடம் இருந்து பறித்த பணத்தை வைத்து 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாகவும், காஸ்டிங் ஏஜென்சி வைத்துள்ளதாகக் கூறியும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக, ஒரு சிலரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி ஏமாற்றி, அவர்களுடன் உடலுறவு வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அப்பெண்களிடம் காரியம் முடிந்ததும் அல்லது அப்பெண்களுக்கு மோனேஷ்-யை பற்றி தெரியவந்ததும் அவர்களுடன் இருந்த அந்தரங்க வீடியோவைக் காட்டி, மிரட்டிப் பணம் பறித்து வந்ததாகவும் அப்பெண் குற்றம்சாட்டுகின்றார். பணம் தர முடியாத ஏழைப்பெண்களை மிரட்டியும் பண ஆசை காட்டியும் அவர்களை வைத்துப் பாலியல் தொழில் செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார். மோனேஷிடம் சிக்கிப் பல பெண்கள் வாழ்க்கையை இழந்தது மட்டுமில்லாமல் அதில் சில பெண்கள் தற்கொலை வரை சென்றுள்ளதாகவும் அந்த இளம்பெண் கூறினார்.
மேலும், பிப்ரவரி மாதம் 2022ஆம் ஆண்டு மற்றொரு பெண் மோனேஷ், தன்னை ஏமாற்றிவிட்டதாக் கூறி நியாயம் கேட்டு திருமங்கலம் வந்தபோது, அவளை பாலா என்னும் நபரை வைத்து பஞ்சாயத்து பேசி மிரட்டியிருக்கிறார். இவ்வாறு அவன் பெண்களை ஏமாற்றுவது தெரிந்தும் அவன் தந்தை பரணிதரன், மாமன் மகன் லெனின், நண்பர்கள் சங்கர், அரவிந்த், கோபி மற்றும் அம்பிகா உறுதுணையாக இருந்து அவனுக்காக இல்லீகல் வேலைகளை செய்கின்றார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அவனது தாய் வைரச்சிலையும் உண்மை தெரிந்தும் அவனை கண்டிக்காமல் அவனுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிகிறது.
மே 31, 2022 முதல் 4 பெண்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக்கூறி அவர்களை ஏமாற்றி வருவதாகவும், இதனை இளம்பெண் கண்டுபிடித்ததும் அவளை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை செய்துள்ளார். அவர்களின் தோட்டத்தில் உள்ள துப்பாக்கியை எடுத்து வந்து அந்த இளம்பெண்ணை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. கடைசியாக ஜுன் 1ஆம் தேதி படப்பிடிப்பிற்கு செல்வதாகக் கூறி மூன்று பெண்களைப் பார்க்க சென்னை சென்று உள்ளார்.
இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அவனிடம் இருந்து தப்பித்து வந்து அவனால் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றும்படி ஜூன் 3, 2022 மதுரையில் உள்ள ஐஜி அலுவலகம் சென்று அந்த இளம்பெண் புகார் மனு அளித்து உள்ளார். நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த மோனேஷ் சாட்சிகளை கலைக்கத் தொடங்கிவிட்டான். அப்பெண்களும் அவனுக்கு பயந்து புகார் கொடுக்கவோ சாட்சி சொல்லவோ வர மறுக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சாட்சி சொல்ல மறுக்கின்றனர். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென டிஜிபி அலுவலகத்தில் அந்த இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு - மாவட்ட ஆட்சியர் பிறப்பிப்பு!