இது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு மத்திய பணியாளர் நலத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், பீலா ராஜேஷ் தனது வருமானத்துக்கு அதிகமாக பல கோடி மதிப்பில் சொத்து குவித்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் கரோனா குறித்த அச்சம் எழுந்த நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து. இதைத்தொடர்ந்து கரோனா வைரஸ் பரலானது நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறித்த தகவல்களையும், சிகிச்சை விவரங்களையும் நாள்தோறும் தவறாமல் மாலைபொழுதில் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்து வந்தார் அப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ்.
ஒரு கட்டத்தில் வைரஸ் தொற்றின் பாதிப்பு மிகவும் தீவிரமடைந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு தவிர்க்கப்பட்டபோதில், கரோனா குறித்த விவரங்களை தொடர்ந்து தவறாமல் வெளியிட்டு வந்தார். அத்துடன் கரோனா குறித்த சந்தேகங்களுக்கு மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் பதில் அளித்து பொது மக்களிடம் நன்மதிப்பை பெற்றார்.
இதைத்தொடர்ந்து ஜூன் மாதத்தில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், திடீரென வணிக வரித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, தற்போது அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இ-பாஸ் முறைகேடு - அமைச்சர் எச்சரிக்கை!