ETV Bharat / state

தாம்பரத்தில் பிடிபட்ட உள்ளாடை திருடன்.. பல்லாவரத்தில் சிக்கிய செருப்பு திருடன்.. சென்னை குற்றச் செய்திகள்! - compilation of theft in chennai

Chennai Crime News: தாம்பரத்தில் பிடிபட்ட உள்ளாடை திருடன் முதல் மைலாப்பூரில் பிடி பட்ட பால் பாக்கெட் திருட்டு கும்பல் வரை, சென்னை பிராதான இடங்களில் அரங்கேறிய வினோத திருட்டு சம்பவங்களும் பிடிபட்ட திருடர்கள் குறித்து செய்தி தொகுப்பு

சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வினோத திருட்டு சம்பவங்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 10:36 PM IST

தாம்பரம் உள்ளாடை திருடன்: கிழக்குத் தாம்பரம் இரும்புலியூரில் பகுதிகளில் கடந்த சில தினங்களாக, நள்ளிரவு நேரத்தில் மர்ம ஆசாமி ஒருவன் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவதும், அவர்களின் உள்ளாடைகளைத் திருடிச் செல்வதுமான சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தான்.

இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக பெண்களின் உள்ளாடைகளை மர்ம ஆசாமி திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளுடன் செய்தி ஒளிபரப்பானது.

இந்நிலையில், நேற்று (நவ.7) அதிகாலை அந்த மர்ம ஆசாமி, மீண்டும் பொது மக்களின் வீட்டுக்குள் சென்று பாலியல் தொந்தரவு செய்ய முயன்றபோது, பொதுமக்களிடம் அவனைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சேலையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த தமிழ் பிரபு (26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிடி பட்ட உள்ளாடை திருடன்
பிடி பட்ட உள்ளாடை திருடன்

சிசிடிவியில் சிக்கிய செருப்பு திருடன்: பல்லாவரம் அடுத்த சிட்லபாக்கம் நேரு நகர் பகுதியில், தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இளைஞர் ஒருவர், வீட்டில் வெளியே இருந்த காலணி ஸ்டாண்டில் விடப்பட்டு இருந்த காலணிகளை மொத்தமாக ஒரு மூட்டையில் சுருட்டிக் கொண்டு எடுத்துச் செல்லும் சிசிடிவி கட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக இது போன்ற காலணிகள் திருடப்படும் சம்பவம், பல்லாவரம் தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகளவில் நடைபெறுவதாகவும், அப்படித் திருடப்படும் காலணிகள் வெள்ளிக்கிழமை பல்லாவரம் வாரச் சந்தையில் விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சிசிடிவியில் சிக்கிய செருப்பு திருடன்

மது குடிக்க பால் பாக்கெட்டுகளை திருடிய பலே கும்பல்: மயிலாப்பூர் பஜார் சாலையில் உள்ள ஆவின் விற்பனையாகத்தில், மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பால்பாக்கெட்களை இரு சக்கர வாகனத்தில் திருடிச் சென்றுள்ளது. இது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு உரிமையாளர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சேர்ந்த வசந்த், ரத்தின சபாபதி, ஜெயசீலன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மது அருந்தப் பணம் இல்லாததால் பால் பாக்கெட்டை திருடி விற்பனை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வீட்டில் லீசுக்கு இருந்தவரை வெளியேற்றி பூட்டு போட்ட நடிகர் நாகேந்திர பிரசாத் - பூட்டை உடைத்த போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.