தமிழ்நாட்டிலுள்ள பொறியியல், மருத்துவம், சட்டம், பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழிற்படிப்புகளைக் கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆண்டுக் கட்டணம் சுயநிதி தொழிற்கல்வி நிறுவனங்களின் கட்டண நிர்ணய குழுவால் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்தக் கட்டண நிர்ணய குழுவானது நிர்ணயம் செய்யும் கட்டணம் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்படும். 2017-18ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்விக்கான கட்டணத்தை சுயநிதி தொழிற் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணய குழுத் தலைவர் தலைவர் பாலசுப்ரமணியன் அறிவித்தார். எனவே மூன்றாண்டுகள் முடிவடைந்து உள்ளதால் 2020-21ஆம் கல்வியாண்டிற்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது.
இந்த நிலையில் சுயநிதி தொழில் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணய குழுத் தலைவராக இருந்த பாலசுப்ரமணியன் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி இயற்கை எய்தினார். இதனால் அந்தப் பதவி காலியாக இருந்தது.
உயர் கல்வித் துறைச் செயலாளர் அபூர்வா இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழ்நாட்டில் செயல்படும் சுயநிதி தொழிற் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என 2003ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.