சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துவருகின்றன. அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது போல ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் கியாஸ் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்.
இதன்படி கடந்த மாதம் ஜூன் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 135 குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 373 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை மேலும் 187 ரூபாய் குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 186 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஆனால் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எந்தவித மாற்றமும் இன்றி 1018.50க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க: திராட்சை விலை உயர்வால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி!