சென்னை : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் 19 கிலோ எடையிலான வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 101.50 ரூபாய் வலை உயர்ந்து ஆயிரத்து 999.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு! #etvbharat #etvbharattamil #cyclinder #LPG #LPGprice #lpgpricehike pic.twitter.com/qQYC7MJkMs
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு! #etvbharat #etvbharattamil #cyclinder #LPG #LPGprice #lpgpricehike pic.twitter.com/qQYC7MJkMs
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 1, 2023வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு! #etvbharat #etvbharattamil #cyclinder #LPG #LPGprice #lpgpricehike pic.twitter.com/qQYC7MJkMs
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 1, 2023
கடந்த அக்டோபர் மாதம் 19 கிலோ எடையிலான வணிக சிலிண்டரின் விலை 203 ரூபாய் உயர்ந்து 1,898 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் இதே 19 கிலோ எடையிலான வணிக சிலிண்டர் 158 ரூபாய் விலை குறைக்கப்பட்டு இருந்த நிலையில், அயிரத்து 695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று (நவம்பர். 1) வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 101.50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு 1,999.50 ரூபாய்க்கு விற்பனை உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்து இருப்பது உணவகம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு உள்ளோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திடீர் விலை உயர்வால் உணவகங்களில் உணவுப் பொருட்களில் விலைப் பட்டியலில் மாற்றங்கள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில் பெட்ரோல், டீசல் விலை ஏதும் உயர்த்தப்படவில்லை. வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்படவில்லை. தொடர்ந்து 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்ப மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : போதைப்பொருள் கடத்திய நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!