கரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்டன.
இதனிடையே நோய் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
கல்லூரிகளின் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வகுப்புகள் தொடங்கியது.
இந்நிலையில் இன்று (ஜன.06) முதல் புதுச்சேரியிலுள்ள அனைத்து உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் வகுப்புகள் தொடங்கின. இதனால், மாணவர்கள் ஆர்வத்துடன் கல்லூரிக்கு சென்றனர்.
மேலும், கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவக் கல்லூரி கல்வி கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் நூதனப் போராட்டம்