ETV Bharat / state

மெட்ரோ நிர்வாகம் மீது இளங்கோ குற்றச்சாட்டு!

சென்னை: 'அனைத்து தொழிலாளர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்ற மெட்ரோ நிர்வாகம் முயற்சித்துவருகிறது' என மெட்ரோ ஊழியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் இளங்கோ குற்றம்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Jun 3, 2019, 8:51 AM IST

இளங்கோ

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்கள் இருக்கும்போது ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு ஊழியர்களை மெட்ரோ நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. தற்போது மேலும் ஆறு பேரை பணிநீக்கம் செய்து மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ஊழியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் இளங்கோ நமது ஈடிவி பாரத்துக்காக அளித்த பிரத்யேக பேட்டியில், "அனைத்துப் பணிகளையும் ஒப்பந்த ஊழியர்களுக்குக் கொடுத்ததைக் கண்டித்து சிஐடியூ தலைவர் சவுந்தர்ராஜன் நிர்வாகத்திற்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் கடிதம் எழுதினார். இவ்வாறு கடிதம் எழுதுவது மிரட்டல் விடுக்கும் விதமாக உள்ளது எனக் கூறி, விசாரணை நடத்தி ஏழு பேரை மெட்ரோ நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

மெட்ரோ ஊழியர்கள் சங்கத்தின் துணை தலைவர் இளங்கோ

தற்போது மேலும் மூன்று பேரை சமிக்ஞையை (சிக்னல்) பழுது ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தை கூறி அவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. ஆனால் அவர்களுக்கு அளித்த குற்ற அறிக்கையில் அவர்கள் பணிக்கு சரியாக வரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இருந்தே மெட்ரோ நிர்வாகத்தின் போலித்தனம் தெரிகிறது.

இதேபோல் பல்வேறு காரணங்களை கூறி நிர்வாகம் மொத்தம் 13 பேரை பணிநீக்கம் செய்திருக்கிறது. எல்லா தொழிலார்களையும் ஒப்பந்த ஊழியர்களாக மாற்ற மெட்ரோ நிர்வாகம் முயற்சிக்கிறது. பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை கொடுக்கவும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பினை பாதுகாக்கவுமே நாங்கள் போராடுகிறோம்" என தெரிவித்தார்.

மேலும் ஆறு ஊழியர்கள் பணிநீக்கம் - மெட்ரோ நிர்வாகத்தின் அடாவடி 

சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் சேவையானது 2015 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.  வேலைக்கு செல்வோர், இளைஞர்கள் மற்றும் இதர பயணிகளுக்கு விரைவாக செல்ல மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர் . 

இந்நிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்கள் இருக்கும்போது ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு நிரந்தர பணியாளரகளை விட அதிக சம்பளம் கொடுப்பதாகவும், இதுதவிர சம்பளப் பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபடுவதாகவும் நிரந்தர ஊழியர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து ஏழு ஊழியர்கள் பலவேறு காரணங்களை சொல்லி மெட்ரோ நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. தற்போது அந்த ஏழு பேரோடு சேர்த்து சிக்னல்களை பழுது ஏற்படுத்தியதாக மூன்று பேரையும், சரியாக பணிக்கு வரவில்லை என்று கூறி ஆறு பேரையும் பணிநீக்கம் செய்துள்ளது மெட்ரோ நிர்வாகம். 

இதை பற்றி மெட்ரோ ஊழியர்கள் சங்கத்தின் துணை தலைவர் இளங்கோ நமது ஈ டிவி பாரத் செய்திகளுக்காக அளித்த பிரத்தியேக பேட்டியின் போது தெரிவித்ததாவது :

சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து சென்னையில் தற்போது பெருமைக்குரிய இடமாக உள்ளது. இதில் 248 நிரந்தர ஊழியர்களும், 600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த 248 நிரந்தர ஊழியர்களுக்கும் மத்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவங்களுக்கான ஊதிய விகிதங்கள் அமல்படுத்தபட்டன . கடந்த 2018 -ல் இருந்து புதிய சம்பள விகிதங்கள் அமல்படுத்த பட்டன.இதில் ஊழியர்களுக்கு சரியான ஊதியத்தை அளிக்கமாலும் 18 மாதத்திற்க்குரிய பணத்தையும் பிடித்துவிட்டார்கள். இதை ஊழியர்கள் மெட்ரோ நிர்வாகத்திடம் பல முறை முறைஇட்டும் எந்த பலனும் இல்லை. இதனால் ஊழியர்கள் சிஐடியு சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தனர். இந்த சங்கத்தின் மூலம் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்த கோரிக்கையை பற்றி மெட்ரோ ரயில் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று தெரிவித்து விட்டது. சங்கமே வைக்கக் கூடாது கூடாது என்ற முறையில் அவர்கள் நடந்து கொண்டார்கள். மெட்ரோ ரயில் நிர்வாகத்தை நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி எந்த பலனும் இல்லை இல்லை.
 அனைத்து பணிகளையும் நிரந்தர ஊழியர்களை விட்டுவிட்டு அனைத்து பணிகளையும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குடுத்து விட்டனர். இதை கண்டித்து சிஐடியூ தலைவர் சவுந்தர்ராஜன் நிர்வாகத்திற்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் கடிதம் எழுதினார். அந்த மாதிரி கடிதம் எழுதியது தவறு என்றும் இது மிரட்டல் விடுக்கும் விதமாக உள்ளது என்றும் சொல்லி அவர்களை சஸ்பெண்ட் செய்து விசாரணையும் வைத்து கடைசியாக ஏழு பேரை டிஸ்மிஸ்ஸும் செய்து விட்டார்கள். கடைசியாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊழியர்கள் மீது இனி எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று நிர்வாகம் உறுதி அளித்து பணிக்கு சேர்த்து கொண்டது . ஆனால் மெட்ரோ நிர்வாகம் ஊழியர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பை காலி செய்யுமாறு தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. மேலும் மூன்று பேரை, சிக்னலை பழுது ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தை கூறி அவர்களை சஸ்பெண்ட் செய்துளார்கள். ஆனால் அவர்களுக்கு குடுத்த சார்ஜ் ஷீட்டில் அவர்கள் பணிக்கு சரியாக வரவில்லை என்று குறிப்பிட்டிருக்கறது. இதில் இருந்தே மெட்ரோ நிர்வாகத்தின் போலிதனம் தெரிகிறது. இதே போல் பல்வேறு காரணங்களை கூறி நிர்வாகம் மொத்தம் 13 பேரை பணிநீக்கம் செய்து இருக்கிறது. சட்டவிரோதமாக இவர்களை பணி நீக்கம் செய்துள்ளார்கள். எல்லா தொழிலார்களையும் ஒப்பந்த ஊழியர்களாக மாற்ற மெட்ரோ நிர்வாகம் முயற்சிக்கிறது. பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை கொடுக்கவும் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பினை பாதுகாக்கவுமே நாங்கள் போராடுகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.