ETV Bharat / state

CMDA: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சிஎம்டிஏவின் புதிய திட்ட விபரங்கள்! - CMDA project work

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சி.எம்.டி.ஏ முன்னெடுக்கும் வளர்ச்சி பணிகள் குறித்த திட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

CMDA
சிஎம்டிஏ
author img

By

Published : Jun 2, 2023, 1:57 PM IST

சென்னை: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியை உறுதி செய்ய திட்டமிடப்பட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளன.

இது குறித்து சிஎம்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2022 - 2023 நிதிநிலை அறிக்கையில் காஞ்சிபுரம் நகரத்திற்கான விரிவான மேம்பாட்டுத் திட்டம் மற்றும் புதிய நகர மேம்பாட்டுத் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், சென்னையில் உள்ள வசதிகளை போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 17 கிராமங்கள் உட்பட 65 கிராமங்களை இணைத்து 2 செயற்கைகோள் நகரங்களை உருவாக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் திட்டமிடப்பட்டது.

இதற்காக நகராட்சி துறை சார்பில் திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கான சென்னை பெருநகரப் பகுதிக்கான நகர மேம்பாட்டுத் திட்டம் வரைவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. இதில், "ஆயிரம் கோவில்களின் நகரம்" என்றும் அழைக்கப்படும் காஞ்சிபுரம் பாரம்பரியம் மற்றும் பட்டுப் புடவைகளுக்கு பெயர் பெற்றது.

சென்னையை போல காஞ்சிபுரம் நகரமும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் விளைவாக வணிக நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது சம்பந்தமாக, முக்கிய பகுதியின் பாரம்பரியம் மற்றும் மறுமேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட விரிவான மேம்பாட்டுத் திட்டமும், NH-48 ஐ ஒட்டிய கிராமங்களை மையமாகக் கொண்ட புதிய நகர மேம்பாட்டுத் திட்டமும் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் நகராட்சி பகுதி தயாரிப்புக்காக அடையாளம் காணப்பட்டு விரிவான வளர்ச்சித் திட்டத்திற்காக NH-48 ஒட்டியுள்ள 17 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, 36.14 சதுர கிலோ மீட்டர் அளவில் வையாவூர், கலையானூர், புத்தேரி, மெலம்பி, கிளம்பி, சித்தேரிமேடு, கோனேரிக்குப்பம், திம்மசமுத்திரம், அச்சுக்கட்டு, நெட்டேரி உள்ளிட்ட 17 கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியை உறுதி செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுளன.

இதே போல செங்கல்பட்டு மாவட்டமும் புதுப்பொழிவு பெற உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை சிஎம்டிஏ ‌செங்கல்பட்டு புதுநகர் 2025 - 2045 வளர்ச்சி திட்டத்திற்கான முன்மொழிவுகளை தயாரிப்பதற்கான முன்னெடுப்பினை சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அறிவித்துள்ளது.சென்னை பெருநகர பகுதியின் விரிவாக்கத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளும் அடங்கியுள்ளன.

இந்த விரிவாக்க பகுதியில் வளர்ச்சியை கொண்டு வரும் பொறுப்பு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் உள்ளது. மேலும் இந்த பகுதிகளில் அனைத்து துறை வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்ல சாலைகள், பாலங்கள், பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு வசதிகள், விளையாட்டு மைதானம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரூ.32 கோடியும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ. 35 கோடியும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.25 கோடியும், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரூ.8 கோடியும் என்ற அடிப்படையில் நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் செங்கல்பட்டு புதுநகர் வளர்ச்சிக்கான பகுதியானது 136.25 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட 60 கிராமங்களை உள்ளடக்கியதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முடிச்சூர் கிராமத்தின் அமுதம் நகர், நேமி நத்தம் நகர் மற்றும் வரதராஜ பெருமாள் நகர் பகுதிகளுக்கு மழை நீர் வடிகால் அமைக்க ரூ.4.20 கோடி வழங்கப்பட்டுள்ளது" என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: mekedatu dam: மேகதாது பிரச்னையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை - அமைச்சர் துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.