சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழு மருத்துவத் துறை உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன், ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, சுகாதாரத் துறை அலுவலர்கள், பொதுத்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற 15ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், மழலையர் பள்ளிகள் திறப்பது, திருமணம், பொருள்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் அதிகப்படுத்துதல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இன்று (பிப்ரவரி 12) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தல் காரணமாக மெகா தடுப்பூசி முகாம் இல்லை - அமைச்சர் மா சுப்ரமணியன்