ETV Bharat / state

சென்னையில் 'வலிமை சிமெண்ட்' அறிமுகம்!

தமிழ்நாடு அரசின் சார்பில் மலிவு விலையில் 'வலிமை' என்ற பெயரில் சிமெண்ட் விற்பனையை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசின் வலிமை சிமெண்ட் அறிமுகம்

author img

By

Published : Nov 16, 2021, 3:07 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள சிமெண்ட் 'வலிமை' என்ற பெயரில் இன்று (நவ.16) முதல் வெளிசந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதை முதலமைச்சர் ஸ்டாலின் (MK stalin) தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். முன்னதாக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கட்டுமானத்திற்கு தேவையான மூல பொருள்களின் விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வலிமை சிமெண்ட் (valimai cement) அரசால் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசின் வலிமை சிமெண்ட் அறிமுகம்

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தனியார் சிமெண்ட் மூட்டை ஒன்றின் விலை 420 முதல் 450 ரூபாயாக இருந்தது. இந்த விலை ஜுன் மாதத்தில் 470 முதல் 490 ரூபாயாக உச்சத்தில் உயர்ந்தது. விலை ஏற்றம் குறித்து ஜுன் 14 ஆம் தேதி தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதனால் சிமெண்ட் விலை 20 முதல் 40 ரூபாய் குறைக்க உடன்பாடு எட்டப்பட்டு, விலை குறைந்தது. தற்போதைய விலை 440 ரூபாய் என்பது மார்ச் மாத விற்பனை விலையை விட 4.7 விழுக்காடு அதிகமாகும்.

இந்தநிலையில், தமிழ்நாடு அரசின் வலிமை சிமெண்ட் சுப்பீரியர், பிரிமீயம் என இரண்டு தரத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மூட்டை ஒன்றின் விலை ரூ.360 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 33 ஆயிரம் டன் வெளிசந்தையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, துறை செயலாளர், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: Nallamma Naidu passed away: நேர்மைக்கு எடுத்துக்காட்டு நல்லம நாயுடு - ஸ்டாலின் புகழஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.