சென்னை: கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஜூன் மாதத்தில் மீண்டும் வெளிநாடுகளுக்குச்செல்ல இருக்கிறார். ஜூன் மாத இறுதியில் இங்கிலாந்து செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுயிக்கின் பிறந்த ஊரில் நடைபெறும் அவரது சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்கிறார். பிறகு அங்கு பல தொழிலதிபர்களை சந்திக்கிறார்.
ஜூலை மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் கலந்து கொண்டு, 50க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்க உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் பயணத்திட்டம் விரைவில் வெளியாகும் என அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும்- முதலமைச்சர் ஸ்டாலின்