ETV Bharat / state

வார் ரூம் வாரியரான மு.க ஸ்டாலின்: சர்ப்ரைஸ் விசிட்டால் ஷாக்! - dms Corona Command Center

சென்னை: டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள கரோனா கட்டளை மையத்தை, நேற்றிரவு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

Corona Command Center
வார் ரூம்
author img

By

Published : May 15, 2021, 11:17 AM IST

Updated : May 15, 2021, 11:39 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் வார் ரூம் (கட்டளை மையம்) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு, தேவை குறித்து அறிய அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தக் கட்டளை மையம் உதவியாக அமைகிறது.இந்தக் கட்டளை மையத்தை நிர்வகிக்க தாரேஷ் அகமது, கே.நந்தகுமார், உமா, வினித், கே.பி.கார்த்திகேயன், அழகு மீனா ஆகிய 6 ஐ.ஏ.எஸ் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு 10.30 மணியளவில் கட்டளை மையத்திற்கு அதிரடியாக வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மையத்தின் ஒருங்கிணைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

CM MK STALIN
வார் ரூம் வாரியரான மு.க ஸ்டாலின்

அப்போது, வானகரம் பகுதியிலிருந்து பங்கஜம் என்பவர், வார் ரூம் ஹெல்ப் லைன் எண்ணிற்கு அழைத்தார். உடனடியாக அந்த அழைப்பை எடுத்து பேசிய முதலமைச்சர், அவரின் தேவையை பதிவு செய்து கொண்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கை வசதி ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். முதலமைச்சரின் இந்த உடனடி உதவிக்கு, பங்கஜன் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

இம்மையத்தின் மூலம் சென்னை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், காலியிட விவரங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றும், பெறப்படும் அனைத்து அழைப்புகளுக்கும் முறையான உதவி, ஆலோசனைகள் தடையில்லாமல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

சர்ப்ரைஸ் விசிட் அடித்த மு.க ஸ்டாலின்

இந்த ஆய்வின் போது தேசிய நல்வாழ்வு குழும இயக்குனர் தாரேஸ் அகமது, ஐஏஎஸ் அலுவலர்கள் நந்தகுமார், உமா ஆகியோர் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க ஸ்டாலின், "தமிழ்நாட்டில் படுக்கைகள் - மருந்து கையிருப்பு - உயிர் வளி(ஆக்ஸிஜன்) ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கரோனா கட்டளை மையத்தை (War Room) பார்வையிட்டேன். #Covid19 கட்டுப்படுத்தலில் தமிழ்நாட்டில் நிலவி வந்த குழப்பங்களை சீராக்கி திறனுடன் கையாளும் பாதையில் வெகு விரைவாக பயணிக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா நிவாரணம்: முதல் தவணைத் தொகை இன்று வழங்கல்!

Last Updated : May 15, 2021, 11:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.