சென்னை: பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கருத்து வேறுபாடு உள்ள நிலையில், ஏற்கனவே நீதிமன்றம் இருவரும் ஏன் நேரில் சந்தித்து பேசக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்த நிலையிலும் இருவரும் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இன்று மாலை 5.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் உடன் பேசுகிறார். மேலும், 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சட்டபேரவையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் கலந்து கொள்ள முதலமைச்சர் அழைப்பு விடுக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: வெள்ள பாதிப்பு; ரூ.1,000 கோடி நிவாரண தொகுப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவு.. எந்தெந்த இழப்புக்கு எவ்வளவு தொகை?