ETV Bharat / state

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய சாதனையாளர் ஸ்டாலின்! - வைகோ

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய வரலாற்றுச் சாதனையாளர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
author img

By

Published : Aug 16, 2021, 10:56 AM IST

Updated : Aug 16, 2021, 11:03 AM IST

சென்னை: அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த 216 பேருக்கு ஆலயங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பினை இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் வழங்கும் சமத்துவச் சாதனையை மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிகழ்த்தியிருக்கிறது என மனதாரப் பாராட்டியுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100ஆவது நாளில் அனைத்துச் சாதியினரும், இந்து மத ஆலயங்களில் அர்ச்சகராக நியமனம் செய்யும் ஆணையைத் தமிழ்நாட்டு மக்களுக்கு சமத்துவப் பரிசாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இனி ஆலயங்களில் அனைத்துச் சாதியினர்

சென்னை மயிலாப்பூரில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகளார், தவத்திரு குமரகுருசுவாமிகள், சுகிசிவம், தேசமங்கையற்கரசி முதலான இந்துமத சான்றோர்களின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த 58 அர்ச்சகர்களுக்குப் பணி நியமன ஆணையை மு.க. ஸ்டாலின் வழங்கியது மகிழ்ச்சிப் பெருங்கடலில் மிதக்கச் செய்தது!

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலிலும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் தமிழ் அர்ச்சகர்கள் தமிழில் அர்ச்சனை செய்யும் காட்சியும், ஓதுவாராகப் பணி நியமனம் பெற்ற ஓர் சகோதரி 'போற்றி, போற்றி' என்று தமிழில் வழிபாடு செய்யும் காட்சியும் நம்மைப் பெரிதும் பரவசம் கொள்ளச் செய்துவிட்டது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்

அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த 216 பேருக்கு ஆலயங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பினை இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் வழங்கும் சமத்துவச் சாதனையை - அமைதிப் புரட்சியை மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிகழ்த்தியிருக்கிறது.

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய ஸ்டாலின்

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக 1970ஆம் ஆண்டு குடியரசு நாளான ஜனவரி 26 அன்று கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தப் போவதாக பெரியார் அறிவித்தார். முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது பெரியாரைச் சந்தித்து, அதற்கான நடவடிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று உறுதி அளித்ததை ஏற்று, பெரியார் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

கருணாநிதி இதற்காக எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டன. மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், மனித உரிமைகள் அமைப்புகளும் தொடர்ந்து போராடியதன் விளைவாக 1975 டிசம்பர் 16 அன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனாலும் முட்டுக்கட்டைகள் தடுத்ததால், நடைமுறைக்கு வரவில்லை.

பெரியார் நெஞ்சில் தைத்த முள் பிடுங்கப்பட்டது; ஆனால் காயம் ஆறவில்லை!

பெரியார் மறைந்தபோது, 'இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரவில்லையே! என்ற கவலை பெரியாரின் நெஞ்சில் முள்ளாய் குத்தியது. அந்த முள்ளோடுதான் பெரியாரைப் புதைத்திருக்கிறோம்' என்று கண்ணீர் மல்க குறிப்பிட்டார் கருணாநிதி! அந்த முள்ளை அகற்றும் அரும்பெரும் சாதனையைத்தான் இப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரலாற்றுச் சாதனையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி
பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

இது பொதுநல அரசு

அமைதிப் புரட்சியை - சமத்துவப் புரட்சியை - ரத்தம் சிந்தாப் புரட்சியை நிறைவேற்றி, நமது அரசு பொதுநல அரசு என்று அகிலத்திற்குப் பறைசாற்றியுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அறநிலையத் துறை அமைச்சர், அலுவலர்கள் முதலான அனைவருக்கும் மறுமலர்ச்சி திமுக சார்பில் இதயம் கனிந்த - இதயம் நிறைந்த இனிய வாழ்த்துகள்! பாராட்டுகள்!

இவ்வாறு வைகோ குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கார்கில் நாயகன் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

Last Updated : Aug 16, 2021, 11:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.