ETV Bharat / state

“வெள்ளம் வரும் என்று எச்சரிக்கவில்லை” - முதலமைச்சர் ஸ்டாலின்

CM MK Stalin: சென்னையில் கனமழை, பெருமழை, காற்றுடன் மழை என்று மட்டுமே எச்சரிக்கை செய்தார்களே தவிர, வெள்ளம் வரும், ஒரு நாள் முழுவதும் தொடர் மழை பெய்யும் என்பதை எச்சரிக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

சென்னையில் ஒரு நாள் முழுவதும் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கவில்லை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 1:20 PM IST

சென்னையில் ஒரு நாள் முழுவதும் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கவில்லை

சென்னை: திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அண்மையில் பெய்தது வரலாறு காணாத மழை ஆகும். மழை வரும் என்பது மட்டும்தான் எச்சரிக்கை செய்தார்கள். ஆனால், இவ்வளவு தொடர் மழை பெய்யும் என அவர்கள் எச்சரிக்கை செய்யவில்லை.

கனமழை, பெருமழை, காற்றுடன் மழை என்று மட்டுமே எச்சரிக்கை செய்தார்களே தவிர, வெள்ளம் வரும், ஒரு நாள் முழுவதும் தொடர் மழை பெய்யும் என்பதை எச்சரிக்கவில்லை. கடந்த 47 வருட வரலாற்றில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. மேலும், திமுக ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் பேரிடர்களைச் சந்தித்துள்ளது.

2015ஆம் ஆண்டு வந்த மழைக்கும் வெள்ளத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்தநேரம், செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட காரணத்தினால், அன்று பெரும் வெள்ளத்தை சென்னை மாநகரம் சந்தித்தது.

ஆனால், சென்னையை தற்போது பெரும் வெள்ளத்தில் இருந்து மீட்ட ஒரே அரசு திமுக அரசுதான். அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் என அத்தனை பேரும் களத்தில் நின்று பணியாற்றியதால்தான் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எப்படி மகளிர் உரிமைத்தொகையை தகுதி உள்ள அனைவருக்கும் வழங்கி வருகிறோமோ, அதேபோல் மழையால் பாதிக்கப்பட்ட தகுதி உள்ள அனைவருக்கும் நிவாரண நிதி ரூ.6,000 வழங்கப்படும்.

மேலும் 4 மாவட்டங்களில், மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. ஆய்வு செய்ய வந்த மத்திய குழு அதிகாரிகளே, தமிழ்நாடு அரசு சிறப்பாக வெள்ளம் மீட்புப் பணிகள் செய்துள்ளது என தெரிவித்துள்ளனர்” என கூறினார்.

இதையும் படிங்க: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.