ETV Bharat / state

’தமிழ்மொழிக்கு அரும்பணியாற்றியவர் பாண்டித்துரை’ - முதலமைச்சர் ட்வீட் - tamilnadu cm tweet

சென்னை: பாண்டித்துரையின் நினைவுநாளான இன்று, அவர் தமிழுக்காற்றிய தொண்டுகளை நினைவுகூருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்
author img

By

Published : Dec 2, 2020, 1:29 PM IST

பாலவநத்தம் ஜமீனின் மகனும், செந்தமிழ் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவருமான பாண்டித்துரையார், 1867ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி பிறந்தார். இவர் வாழ்ந்த காலங்களில் தமிழ்மொழிக்குப் பல தொண்டாற்றினார். இவருடைய தீவிர முயற்சியினாலும், பல அறிஞர்களின் முயற்சியாலுமே மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டது. இதற்காகத் தனது பெரிய மாளிகையை பாண்டித்துரையார் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குறளை முப்பாலாகவும், அதிகாரமாகவும் பிரித்து, பன்னூற்றிரட்டு என்ற பெயரில் வெளியிட்டார். இதில் அறம், பொருள், இன்பம் பற்றிய பொதுப்பாடல்கள் தனித்தனியாக எழுதப்பட்டன. தவிர பிற நூல்களையும் அவர் எழுதினார். உடல்நலக்குறைவால் 1911ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி இயற்கை எய்தினார்.

முதலமைச்சர் ட்வீட்
முதலமைச்சர் ட்வீட்

அவருடைய நினைவுநாளான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “செந்தமிழ்ச் செம்மல் என்று பெருமக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட, நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராக இருந்து, தாய்த்தமிழ் மொழிக்கு அரும்பணியாற்றிய பாண்டித்துரைத் தேவர் அவர்களை நினைவுகூருகிறேன்”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.