ETV Bharat / state

"வெளிநாட்டுப்பயணம் இப்படித்தான் இருந்தது" - புள்ளி விவரங்களுடன் விளக்கிய முதலமைச்சர்! - வெளிநாட்டு பயணம்

சென்னை: பதினான்கு நாட்கள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புரிந்துணர்வு மேற்கொண்டது குறித்து நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

edappadi palaniswamy
author img

By

Published : Sep 11, 2019, 6:21 PM IST

வெளிநாடுகளில் உள்ள நகர உட்கட்டமைப்பு நவீன தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும் வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்த்திடவும், இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 28.8.2019 முதல் 10.9.2019 வரை அரசுமுறைப் பயணம் மேற்கொண்டேன் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

லண்டனில் வரவேற்ற தமிழர்கள்
லண்டனில் வரவேற்ற தமிழர்கள்

கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் சென்று அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடுகளைக் கண்டறிந்து, அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், தமிழ்நாட்டில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை நிறுவிடவும், கிங்ஸ் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துக்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார்.

லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இங்கிலாந்தின் suffolk நகரத்தில் என்ஜென் (Enzen) நிறுவனம், மரபுசாரா எரிசக்தியான சூரிய எரிசக்தி, காற்றாலை எரிசக்தி ஆகியவற்றை மின்கட்டமைப்புடன் இணைக்கும் வழிமுறைகளை பார்வையிட்டதோடு, டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களைக் கட்டுப்படுத்துதல், அந்நோய்களை கையாளும் வழிமுறைகள் தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை (statement of intent) கையொப்பமானது.

லண்டனில் சுற்றுச்சுழல் குறித்த ஆலோசனை
லண்டனில் சுற்றுச்சுழல் குறித்த ஆலோசனை

அத்துடன் லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகளைப் பார்வையிட்டு, அந்நிறுவனம் பின்பற்றும் நுட்பமான வழிமுறைகளை தமிழ்நாட்டில் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஊர்திகளில் நடைமுறைப்படுத்த உள்ளோம் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று லண்டனில் உள்ள இங்கிலாந்து பாராளுமன்ற கூட்ட அரங்கில், இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழ்நாட்டில் முதலீடு செய்யவுள்ள சாத்தியக் கூறுகளை பற்றி எடுத்துக்கூறி, அதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நன்மை பற்றியும் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்ய கோரிக்கை விடுத்தாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் ஒப்பந்தம்
யாதும் ஊரே யாவரும் கேளிர் ஒப்பந்தம்

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதியன்று, அமெரிக்க நாட்டினுடைய கலப்பின மாடுகளை உருவாக்கும் தொழில்நுட்பம், பால் மற்றும் இதரப்பொருட்களை பதப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, இந்தப் புதிய தொழில்நுட்பங்களை, சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவில் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை கேட்டறிந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சான் ஹூசே நகரில் சிறுமியின் வரவேற்பு
சான் ஹூசே நகரில் சிறுமியின் வரவேற்பு

கடந்த 3ஆம் தேதியன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ரூபாய் 2,780 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 20,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும், Haldia petrochemicals நிறுவனம், naphtha cracker unit-உடன் கூடிய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க என்னை சந்தித்து ஆலோசனை செய்ததாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து நியூயார்க் நகரில், உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்கவும் "யாதும் ஊரே" என்ற புதிய திட்டத்தை தொடக்கி வைத்தேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கார் நிறுவனத்தை பார்வையிட்ட முதலமைச்சர்

கடந்த 4ஆம் தேதியன்று சான் ஹூசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் 6,500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோர்(ATEA) அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள Digital accelerator திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு தொழில் முனைவோருக்கு அவர்கள் தொடங்கும் புதுத்தொழிலுக்குத் தேவையான நிதியில் 10 விழுக்காடுகளை தமிழ்நாடு அரசு வழங்கும். இதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அத்துடன் சான் ஹீசே நகரில் யாதும் ஊரே யாவரும் கேளிர் திட்டத்தை தொடங்கி வைத்தேன் என்று தெரிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம்

மேலும், கடந்த 5ஆம் தேதியன்று அமெரிக்க நாட்டின், சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா நிறுவனத்திற்கு (TESLA Inc) சென்று, சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கின்ற வகையில் அந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இயங்கிடும் வாகனங்கள், பேட்டரிகள், எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆகியப் பணிகளை பார்வையிட்டேன். அப்போது, இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க டெஸ்லா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தேன்' என்று தெரிவித்த முதலமைச்சர், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் உருவாக்கியுள்ள ப்ளூம் எனர்ஜி (bloom ENergy) என்ற நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டு, மாசில்லா எரிசக்தியை எளிய முறையில் தயாரிப்பது குறித்தும், அத்தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்தும் அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் ஆலேசானை செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

வெளிநாட்டவருடன் பேச்சுவார்த்தை
வெளிநாட்டவருடன் பேச்சுவார்த்தை நடத்திய முதலமைச்சர்

கடந்த 6ஆம் தேதி அன்று லாஸ் ஏஞ்சல்ஸில், Anaheim நகர மேயர் சித்து, தங்களை வரவேற்று அந்நகரில் அமைந்துள்ள கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீராக்கும் மையத்தை காண்பித்தார். கழிவுநீர் சுத்திகரிப்பில் , சிறந்த தொழில்நுட்பத்தை இங்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

அவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுசுழற்சி செய்து, தோட்டங்கள், மரங்களுக்கு நீர் பாசனம் செய்யவும், ஏரிகளில் தேக்கியுள்ள நிலத்தடி நீரை செறிவூட்டி, அந்த நிலத்தடி நீரை குடிநீருக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் அறிந்துகொண்டேன். இதுபோன்று, கழிவுநீரை சுத்திகரித்து, மறுசுழற்சி செய்தால், சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில் நன்னீர் தேவை குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும் என்பதனால், சோதனை அடிப்படையில் ஒரு மாதிரி சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க, Anaheim நகராட்சி மேயர் அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளார். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் கழிவு நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் ஒரு மாதிரி அலகை (unit) அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

தனியார் நிறுவனத்தை சுற்றி பார்த்த போது
தனியார் நிறுவனத்தை சுற்றி பார்த்த போது...

மேலும், அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 9 ஆம் தேதியன்று துபாய் நாட்டிற்குச் சென்று, ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் 'Business Leaders Forum' என்ற அமைப்பும் இந்தியத் துணைத் தூதரகமும் இணைந்து நடத்திய துபாய் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். இந்தக் கூட்டத்தில் 3,750 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 10,800-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

அதனைத்தொடர்ந்து துபாயில் உள்ள தொழில் முனைவோர்களோடு நடைபெற்ற இந்த வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக நான் நேரடியாக கண்டறிந்த பல திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும், கிராமங்கள் மற்றும் நகரங்களின் கட்டமைப்புகளையும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்ய, இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

துபாய் பயணத்தில் முதலமைசசர் பழனிசாமி
துபாய் பயணத்தில் முதலமைச்சர் பழனிசாமி

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து மொத்தம் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் மூலமாக 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ட நிறுவனங்களுக்குத் தொழில்கள் தொடங்குவதற்கு உண்டான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகள் சுற்றுலாவிற்கு அதிக முன்னுரிமை அளிக்கின்றனர். அந்த வழியில் தமிழ்நாடு அரசும் சுற்றுலாவிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.