ETV Bharat / state

'தான் ஒரு விவசாயி எனக்கூறி வேளாண் மசோதாவை எடப்பாடி ஆதரித்தது வேதனை!' - support of the Agriculture Bill

சென்னை: தான் ஒரு விவசாயி எனக் கூறும் முதலமைச்சர் பழனிசாமி வேளாண் மசோதாவை ஆதரித்தது வேதனையாக இருக்கிறது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவி்த்தார்.

jawahirulla
jawahirulla
author img

By

Published : Sep 28, 2020, 9:40 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக, அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சென்னை அடுத்த தாம்பரம் சண்முக சாலையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, "எடப்பாடி பழனிசாமி அரசு தமிழ்நாட்டின் உரிமைகளையெல்லாம் மத்திய பாஜக அரசிடம் பறிகொடுத்துவருகிறது. மாநில அரசின் சட்ட திட்டத்தில் வரும் வேளாண் சட்டத்தை ஜனநாயக விதிமுறைகளை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

'நான் ஒரு விவசாயி' எனக் கூறும் முதலமைச்சர் பழனிசாமி வேளாண் மசோதாவை ஆதரித்தது வேதனையான ஒன்று. இது விவசாயிகளை மட்டுமல்லாமல் அனைத்து மக்களையும் பாதிக்கும் எனத் தெரிந்தும் எடப்பாடி ஆதரிக்கிறார்.

தமிழ்நாட்டில் பெரியார் காலம்முதல் திராவிட கட்சிகள் என அதிமுக ஆட்சியில் இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருந்தது.

வேளாண் மசோதாவை ஆதரிக்கும் எடப்பாடி

இந்தப் புதிய தேசிய கல்விக்கொள்கையில் பல்வேறு மாநில உரிமைகள் பறிக்கப்படும் நிலையில் உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நீட் தேர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.