ETV Bharat / state

யுனானி மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி நிறைவு!

சென்னை: மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (பிப்.10) ஐந்தாவது யுனானி மருத்துவ கண்காட்சியின் நிறைவு நாள் கொண்டாடப்பட்டது.

closing-unani-medical-awareness-exhibition

author img

By

Published : Feb 10, 2021, 10:03 PM IST

புகழ்பெற்ற யுனானி மருத்துவரான அஜ்மல் கானின் பிறந்தநாளான பிப்ரவரி 11ஆம் தேதி யுனானி தினமாக அனுசரிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை ராயபுரத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், கடந்த 20 நாள்களாக நடைபெற்று வந்த யுனானி மருத்துவ கண்காட்சியின் நிறைவு நாள் இன்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குனர் கணேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழிப்புணர்வு கண்காட்சியில், ஆரோக்கிய வாழ்வின் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

யுனானி முறையில் மருத்துவ தாவரங்கள், மூலிகைகளின் பற்றிய கண்காட்சியும் பொதுமக்களின் பார்வைக்காக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யூடிஎஸ் செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை பெறலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.