ETV Bharat / state

Clean Chennai : ‘நமது குப்பை நமது பொறுப்பு’ மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்திய தன்னார்வலர்கள்!

Chennai Corporation: பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் கடலோரக் காவல் படை இணைந்து மெரினா கடற்கரையில் தீவிரத் தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினர் பங்கேற்று சென்னை மெரினா கடற்கரையை சுத்தம் செய்தனர்.

Chennai Corporation
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினாவில் தீவிரத் தூய்மை பணி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 11:34 AM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் கடலோரக் காவல் படை இணைந்து மெரினா கடற்கரையில் "தீவிர தூய்மைப் பணி" முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினர் பங்கேற்று சென்னை மெரினா கடற்கரையை சுத்தம் செய்தனர். பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், ‘தூய்மை சென்னை’ என்ற திட்டத்தின் மூலம் சென்னையை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், பல்வேறு இடங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. மேலும், நீர்நிலைகளை சுத்தம் செய்தல், மயான பூமிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் சென்னை மெரினா கடற்கரையில், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொது மக்கள், மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு மெரினாவை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

  • To mark International Coastal Cleanup Day, the Indian Coastal Guard East (Region) in collaboration with #GCC, hosted a beach cleanup activity at Marina Beach today. Dr. @RAKRI1, IAS., the ACS/GCC Commissioner, participated in the clean-up activity along with GCC, (1/2) pic.twitter.com/rhGhjm7IxC

    — Greater Chennai Corporation (@chennaicorp) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதை பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் மாதத்தின் 2 மற்றும் 4 ஆம் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய பகுதிகளான பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் உள்ள அமைவிடங்களில் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மக்கள் பிரிதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று (செப்.16) சென்னை மெரினா கடற்கரையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் கடலோரக் காவல் படை சார்பில் தூய்மையான கடற்கரை என்ற தலைப்பில் கடற்கரையில் தீவிர தூய்மை பணி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தீவிரத் தூய்மைப் பணியில் கூடுதல் தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் காலி இடங்கள், மயானங்கள், நீர்வழித் தடங்கள், நீர்நிலைகளை சுற்றியுள்ள பகுதிகள், அதிகம் குப்பைகள் உள்ளதாக கண்டறியப்பட்ட இடங்கள் எனப் பல்வேறு இடங்களில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 70 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ‘நமது குப்பை நமது பொறுப்பு’ என்பதனை உணர்ந்து பொது இடங்களிலும், நீர்நிலைகளிலும் தேவையற்ற கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து, தங்கள் இல்லங்களிலேயே குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:உலக அமைதியை வலியுறுத்தி காந்திய வழியில் நடைபயணம் நாளை தொடங்குகிறது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.