சென்னை: வடபழனியை சேர்ந்த மாணவி அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (நவம்பர் 16) மாலை பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமி, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிறுமியில் தந்தை வடபழனி காவல்துறையினரிடம் தகவல் அளித்துள்ளார்.
அதன் பேரில் சம்பவ இத்திற்கு சென்ற காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சிறுமி ஒரு இளைஞரை காதலித்து வந்ததும், அடிக்கடி அந்த நபரிடம் தொடர்ந்து செல்போன் பேசி வந்ததால், இதனை அறிந்த பெற்றோர் சிறுமியிடம் இருந்த செல்போனை பறித்து கண்டித்ததாகவும், இதனால் கோபம் அடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அட்வைஸ் பண்ண ஆசிரியர் மண்டை உடைப்பு.. விழுப்புரம் பகீர் சம்பவம்!